திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோயில்
திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோயில் is located in தமிழ் நாடு
திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோயில்
திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோயில்
ஜகந்நாத பெருமாள் கோயில், திருமழிசை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:13°03′08″N 80°03′41″E / 13.0523°N 80.0615°E / 13.0523; 80.0615Coordinates: 13°03′08″N 80°03′41″E / 13.0523°N 80.0615°E / 13.0523; 80.0615
பெயர்
வேறு பெயர்(கள்):மத்திய ஜகந்நாதம்[1]
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவள்ளூர் மாவட்டம்
அமைவிடம்:திருமழிசை, திருவள்ளூர் மாவட்டம்
சட்டமன்றத் தொகுதி:பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:திருவள்ளூர் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:78 m (256 அடி)
கோயில் தகவல்
மூலவர்:ஜகந்நாத பெருமாள்
தாயார்:திருமங்கைவல்லி தாயார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:உள்ளன
வரலாறு
கட்டிய நாள்:1,000 ஆண்டுகள் தொன்மையானது[2]

திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் திருமழிசை புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[3]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 78 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°03′08″N 80°03′41″E / 13.0523°N 80.0615°E / 13.0523; 80.0615 ஆகும்.

இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[4] இக்கோயிலில் திருமங்கைவல்லி தாயார் சன்னதி, பக்திசாரர் என்கிற திருமழிசை ஆழ்வார் சன்னதி, ஆண்டாள் சன்னதி மற்றும் இராமானுசர் சன்னதி ஆகியவையும் உள்ளன. வைகாநச ஆகம முறைப்படி பூசைகள் நடக்கும் இக்கோயிலின் தலவிருட்சம் பாரிஜாதம் மற்றும் தீர்த்தம் பிருகு புஷ்கரணி ஆகும்.[5]

2022ஆம் ஆண்டு சூலை மாதம் ஏழாம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயிலின் ஆனி பிரம்மோத்சவத் திருவிழாவின் தேரோட்டம் சூலை 14ஆம் நாள் நடைபெற்றது. மொத்தம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டது.[6] 2023ஆம் ஆண்டு சூன் மாதம் 27ஆம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனி பிரம்மோத்சவத் திருவிழாவின் தேரோட்டம் சூலை மாதம் மூன்றாம் நாள் நடைபெற்றது.[7][8]

மேற்கோள்கள்

  1. மு.இசக்கியப்பன் (2023-07-06). "மத்திய ஜகந்நாதம் என்னும் திருமழிசை". காமதேனு. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
  2. "Jagannatha Perumal Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
  3. "Jagannatha Perumal Temple, Thirumazhisai, Chennai suburb". greenmesg.org. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
  4. "Arulmigu Jaganatha Perumal Alias Thirumazhisai Azhwar Temple, Thirumazhisai - 600124, Tiruvallur District [TM001829].,Thirumazhisai Azhwar,Jaganatha Perumal". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
  5. "Jagannatha Perumal Temple : Jagannatha Perumal Jagannatha Perumal Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
  6. மாலை மலர் (2022-07-15). "திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் தேரோட்டம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
  7. "திருமழிசை ஜெகன்னாத பெருமாள் கோவிலில் நாளை ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றம் - Dinamalar Tamil News". Dinamalar. 2023-06-26. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
  8. Maalaimalar (2023-06-27). "திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்" (in ta). https://www.maalaimalar.com/devotional/worship/thirumalisai-jagannath-temple-brahmotsavam-start-628258. 

வெளி இணைப்புகள்