திருமழபாடி
திருமழபாடி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | அரியலூர் |
அரசு | |
• நிர்வாகம் | MUNNAM THIRUMAZHAPADI FROM 1998 ; Mazhavai Foundation |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 2,718 |
மொழிகள் | |
• ஆட்சி மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சல் குறியீட்டு எண் | 621851 |
தொலைபேசி குறியீட்டு எண் | 04329 |
வாகனப் பதிவு | TN-46 |
Coastline | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
அருகில் உள்ள நகரம் | தஞ்சாவூர் |
பாலின விகிதாச்சாரம் | 1010 ♂/♀ |
எழுத்தறிவு | 76.08% |
நாடாளுமன்றத் தொகுதி | சிதம்பரம் |
ஆட்சிக் குழு | MUNNAM THIRUMAZHAPADI FROM 1998 ; Mazhavai Foundation |
திருமழபாடி அரியலூர் மாவட்டத்தில், திருமானூர் லால்குடி சாலையில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஊர். இங்குள்ள வைத்தியநாதர் கோயில் மூவர் பாடிய தேவாரப் பாடல்களில் இடம் பெற்ற சிறப்புடையது.
அமைவிடம்
அரியலூரில் இருந்து 28 கி மீ தொலைவிலும் தஞ்சாவூரில் இருந்தும் 28 கி மீ தொலைவிலும் அமைந்துள்ள இவ்வூர் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.
சிவத் தலம்
"பொன்னார் மேனியனே" எனத் தொடங்கும் தேவாரப் பாடலின் இறுதி வரியில் வரும் "மண்ணே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே " எனக் குறிப்பிடப்படும் சிறப்புடைய இவ்வூர் வரலாற்றில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான ஊர். இவ்வூரைச் சுற்றியும் கண்டராதித்தம், செம்பியக்குடி, அரண்மனைக் குறிச்சி, பாளையப் பாடி, குலமாணிக்கம் ஆகிய ஊர்கள் உள்ளன. சோழர் மரபில் வந்த கண்டராதித்தன் பெயரிலும், மழவர் குல மாணிக்கம் என அழைக்கப்பட்ட செம்பியன் மாதேவியின் பெயரிலும் அமைந்துள்ளவையே மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஊர்களின் பெயர்கள்.
பிற விவரங்கள்
இங்கு அரசு மேல் நிலைப்பள்ளி ஒன்றும் உள்ளது. இவ்வூரின் பேருந்து நிறுத்தம் அருகே 750 கிலோ எடையுள்ள திருவள்ளுவர் உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பெற்றுள்ளது.