திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2012
Jump to navigation
Jump to search
திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2012 கடந்த இரண்டு ஆண்டுகளிலும் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள் ஆகியவற்றில் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்ட படைப்புகளுக்கு திருப்பூர் மத்திய அரிமா சங்கம், சுதாமா கோபாலகிருஸ்ணனால் வழங்கப்பட்ட விருதுகளாகும். சிறந்த குறும்படங்களை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், கவிஞர் சுபமுகி, வழக்கறிஞர் சி. ரவி கொண்ட குழு தெரிவு செய்தது. விருது வழங்கும் நிகழ்வு 18 ஜூன், 2012 இல் மத்திய அரிமா சங்கக் கட்டிடம், ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர், திருப்பூரில் நடைபெற்றது. சுதாமா கோபாலகிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார். சுப்ரபாரதிமணியன் பரிசு பெற்ற குறும்படங்களைப் பற்றி விளக்கினார். [1] [2][3]
அரிமா குறும்பட/ ஆவணப்பட விருது பெற்றவர்கள்
- ச. பாலமுருகன் - கோவை (ஓயாமாரி - கோபியைச் சார்ந்த விடுதலைப் போராட்ட வீரர் லட்சுமண் அய்யர் பற்றிய ஆவணப்படம்) (முதலிடம்)
- தவமுதல்வன் , கோத்தகிரி (பச்சை இரத்தம் - தாயகம் திரும்பிய தேயிலைத்தோட்ட்த் தொழிலாளர்களின் கதை) ( இரண்டாமிடம்)
- புதுகை யுகபாரதி , புதுச்சேரி (குருவி தலையில் பனங்காய் குழந்தைகள் மேல் நமது கல்விமுறை செலுத்தும் ஆதிக்கம், வன்முறை பற்றியது) (மூன்றாமிடம்)
ஊக்கப் பரிசு பெற்றவர்கள்
- சூர்யபாரதி, திருப்பூர் (அன்பு உள்ள அப்பா)
- திருநாவுக்கரசு, திருப்பூர் (புதிய உலகம்)
அரிமா சக்தி விருது பெற்றவர்கள்
- சுமதிஸ்ரீ, கோபி (தகப்பன் சாமி - கவிதைத்தொகுப்பு)
- மஞ்சுளா. மதுரை (மொழியின் கதவு - கவிதைத்தொகுப்பு)
மேற்கோள்கள்
- ↑ http://puthu.thinnai.com/?p=11984
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=495208&Print=1
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-30.