திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள்
அரிமா விருது என்பது திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தினால் ஆண்டுதோறும் வழங்கப் பட்டு வரும் ஒரு விருது ஆகும். இவ்விருது படைப்பாளிகளை ஊக்குவிக்குமுகமாக அரிமா குறும்பட விருது என்ற பெயரில் சிறந்த குறும்படங்களுக்கும், அரிமா ஆவணப்பட விருது என்ற பெயரில் சிறந்த ஆவணப்படங்களுக்கும், அரிமா சக்தி விருது என்ற பெயரில் சிறந்த பெண் எழுத்தாளர்களுக்கும் 15 ஆண்டுகளாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014
திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 டிசம்பர் 25, 2014 இல் திருப்பூர், காந்தி நகர், மத்திய அரிமா சங்க வளாகத்தில் 30 படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டது. அரிமா குறும்பட/ ஆவணப்பட விருதுகள் 5 பேருக்கும், திருப்பூர் குறும்படப் படைப்பாளிகளுக்கான சிறப்புப் பரிசுகள் 3 பேருக்கும் அரிமா சக்தி விருதுகள் 22 பெண்களுக்கும் வழங்கப்பட்டன. விருதுகளை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், அரிமா சங்க இயக்குநர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியை பேராசிரியை செல்வி தொடக்கி வைத்தார்.[1][2][3]
திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013
திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013, ஜூன் 15, 2013 இல் மத்திய அரிமா சங்கம், ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர், இந்தியாவில் 14 படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டது. அரிமா குறும்பட/ ஆவணப்பட விருதுகள் 8 பேருக்கும், திரைப்பட நூலுக்கான விருது ஒருவருக்கும், அரிமா சக்தி விருதுகள் 5 பெண்களுக்கும் வழங்கப்பட்டன. நிகழ்வுக்கு அரிமா உதயசங்கர் தலைமை தாங்கினார். சுப்ரபாரதிமணியன், அஜயன்பாலா, ஈழவாணி, சி.ரவி. ஆகியோர் உரை ஆற்றினர். பரிசுத்தொகை 25000 ரூபா.[4]
திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2008
திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2008 ஓகஸ்ட் 26, 2008 இல் 13 படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டது. அரிமா குறும்பட விருதுகளை 8 குறும்படப்படைப்பாளிகளும் (கருணா ,விஆர்பி மனோகர், ஆண்டோ, தாரகை, கோவை சதாசிவம்,புவனராஜன், சுபாஸ், குணவதிமைந்தன்) அரிமா சக்தி விருதுகளை 5 பெண் எழுத்தாளர்களும் (பேராசிரிகைகள் முத்து சிதம்பரம், பாக்கியமேரி, சுலோட்சனா, அருணாதேவி, அம்சா) பெற்றுக் கொண்டனர். [5]
மேற்கோள்கள்
- ↑ http://www.ahilas.com/2014/12/blog-post_27.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-28.
- ↑ http://puthu.thinnai.com/?p=27887
- ↑ http://puthu.thinnai.com/?p=21136
- ↑ http://rpsubrabharathimanian.blogspot.de/2008/08/blog-post_29.html