திருபுரைக்கல் கோயில்செல்லத்தம்மன் கண்ணகி கோயில்

திருபுரைக்கல் கோயில் (முழுப்பெயர்: கச்சனம் குளம் திருப்புரைக்கல் பகவதி கோயில் ) என்பது இந்திய மாநிலமான, கேரளத்தில் உள்ள பாலக்காடு நகரில் மூத்தன்தராவில் உள்ள ஒரு இந்து கோவிலாகும் . இது கண்ணகி அம்மன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. [1]

கொடுவாயூரில் மற்றொரு கண்ணகி கோயில் உள்ளது, இது பாலக்காட்டைச் சுற்றியுள்ள அனைத்து கண்ணகி கோயில்களின் மூலமாக உள்ளது

வழிபாடு

இந்த கண்ணகி கோயிலில், கண்ணகி தெய்வம் முழு வடிவ சிலையாக வணங்கப்படுகிறாள். [2] இந்த கோயில் பாலக்காடு நகர வட்டத்தில் மூத்தன்தாராவின் (புதிய பெயர் - கண்ணகி நகர்) அமைந்துள்ளது. இது வரலாற்று காலத்தில் அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலிருந்து வந்தத கண்ணகியின் சொந்த மக்களின் வசிப்பிடமாகும்.

இந்த கோயிலில் முக்கியமாக கவரக்கூடிய அம்சங்களில் ஒன்று, பாரம்பரிய பூசை சடங்குகள் கண்ணகியின் கோயிலும், கோயில் வளாகத்தில் உள்ள விசாலட்சி உடணுறை சிவன் கோயிலிலும் (சிவன்-பார்வதி கோயில்) செய்யப்படுகின்றன. கண்ணகிக்குப் பொறுத்தவரை, பூசை நடைமுறைகளின் கேரள வடிவில் நம்பூதிரிகளால் செய்யப்படுகிறது ; சிவன் கோவிலில், தமிழ் சைவ பூசை நடைமுறைகளில் தமிழ் பிராமண அர்ச்சகர்களால் செய்யப்படுகின்றன.

ஏற்கெனவே உள்ள அல்லது அண்டை மாநிலங்களிலிருந்து குடியேறிய பிற தமிழ் சாதிக் குழுக்களைப் போலல்லாமல், மூத்தன் மக்கள் இரு பண்பாடுகளையும் ஒன்றுபோல ஏற்றுக்கொண்டவர்களாக உள்ளனர். அவர்களின் தோற்றத்தில் தமிழ் தடயங்கள் இருந்தாலும், அவர்கள் மலையாளத்தை மட்டுமே பேசுகிறார்களாக உள்ளனர். இந்த பண்பாட்டு கலவை கேரள மாநிலத்தில் அசாதாரணமானது, கேரளம் வரலாற்று ரீதியாக ஒரு தமிழ் பேசும் நிலமாகவும், மலையாளம் அண்மைய மொழி மட்டுமே என்றாலும். தமிழ் மற்றும் மலையாள கட்டிடக்கலைகளின் கலவையை வெளிப்படுத்தும் விதமாக இந்த கோயில் பாலக்காட்டின் விசாலமானதும், அழகிய கோயில்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

கோயிலின் முக்கிய திருவிழாவான வல்லிய ஆராட்டு விழாவானது, மலையாள நாட்காட்டியில் மூன்று நாட்கள் சமூகத்தால் கொண்டாடப்படுகிறது. வல்லியா ஆராட்டு நாளில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது, இது ஒவ்வொரு ஆண்டும் பாலக்காட்டில் ஏற்பாடு செய்யப்படும் மிகப்பெரிய நிகழ்வாகும். இந்தச் செயல்பாட்டை ஒழுங்கமைப்பதற்கான செலவு கண்ணகியின் பக்தர்களால் முழுமையாக வழங்கப்படுகிறது, அவர்கள் பாலக்காட்டில் அனைத்து வகை வணிகங்களிலும் ஈடுபடுபவர்களாக உள்ளனர்.

வரலாறு

கண்ணகி தேவியின் பழைய கருவறை [3] மூதாத்தன்தாராவில் (மேலமூரி) நடு-பாதியில் உள்ளது. இந்த கோயில் நன்கு பராமரிக்கப்பட்டு, பிற அண்டை தேசங்களில் இருந்து மக்கள் கண்ணகியை வணங்கி வந்தார்கள் (அந்த காலகட்டத்தில் கண்ணகியின் ஒரே ஒரு சிலை தட்டுமே இங்கு இருந்துவந்தது). ஐதர் அலியின் மகனான திப்பு சுல்தான் பாலக்காட்டைக் கைப்பற்றி ஆண்ட காலத்தில் இந்த கோயிலைக் கொள்ளையடித்து அழித்ததாக வரலாற்றில் காணப்படுகிறது. முன்னதாக கோயிலின் உடைமைகளை காப்பாற்றவும், சிலை அழிக்கப்படுவதிலிருந்து காக்கவும் பக்தர்கள் ஒன்று கூடினர். இந்த சிலையை கண்ணகியின் சொந்த குலத்தினரான மூத்தன்களால் மறைத்துவைக்கபட்டு மூத்தந்தாராவின் கண்ணகி அம்மான் கோவிலில் வைத்து வழிபடப்படுகிறது. கண்ணகி சிலை இருந்த பீடம் வடக்காந்தர பகவதி கோயிலில் வழிபடப்படுகிறது, அதே நேரத்தில் அவரது குடை நகர வட்டத்தில் உள்ள மற்றொரு கண்ணகி கோவிலில் வணங்கப்படுகிறது, மேலும் பைரிரி கண்ணுகொட்டு பகவதி கோவிலில் கெண்டிகை (கமண்டலம்) வழிபடப்படுகிறது.

குறிப்புகள்