திருட்டுப்பயலே 2
திருட்டுப்பயலே 2 | |
---|---|
இயக்கம் | சுசி கணேசன் |
தயாரிப்பு | கல்பாத்தி எஸ்.அகோரம் |
கதை | சுசி கணேசன் |
இசை | வித்தியாசாகர் |
நடிப்பு | பாபி சிம்ஹா அமலா பால் விவேக் பிரசன்னா |
ஒளிப்பதிவு | பி.செல்லத்துரை |
கலையகம் | ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் |
வெளியீடு | 30 நவம்பர் 2017 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திருட்டுப்பயலே 2 (Thiruttu Payale 2) (2017) படம் இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் 10 வருடங்களுக்கு பிறகு உருவாகும் இரண்டாம் பாகம். இத்திரைப்படத்திலும் பாபிசிம்ஹா, விவேக், அமலா பால், பிரசன்னா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம். ஆனால் இரண்டு கதைக்கும் தொடர்பு இல்லை.தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் எதிர்மறை பாதிப்புகள்தான் இந்தக் கதைக்கு அடித்தளம். இன்றைய தலைமுறைகள் சந்திக்கும் பிரச்சனை புரியும் படி திரைக்கதை அமைந்து உள்ளது.
கதை களம்
நேர்மையான போலீஸ் அதிகாரி செல்வம்(பாபி சிம்ஹா). அவர் வசிக்கும் விட்டின் கீழ் வசிக்கும் அகல்யாவை(அமலா பால்) காதல் திருமணம் செய்கிறார். பிரபலங்களின் போன் கால்களை ஒட்டுக்கேட்பது அவருக்கு இடப்பட்ட உத்தரவு. நேர்மையாகப் பணிபுரிந்தால் விரைவாக பணம் சேமிக்க இயலாது என்பதனைப் புரிந்து நேர்மையற்ற வழிகளில் பணம் பெற என்னுகிறார். ஒரு நாள் அமைச்சரின் போன்காலை ஒட்டுக் கேட்கும் செல்வம், அவரின் பணத்தை எடுத்து விடுகிறார். இந்த வேலையைத் தொடர ஆரம்பிக்கிறார். பாபியின் காதல் மனைவி அகல்யா ஃபேஸ்புக்லேயே கிடப்பவர். அகல்யா பிறந்தநாளுக்கு தனது நண்பர்களை விருந்துக்கு அழைக்கிறார். அந்த நண்பர்களின் போன் கால்கள் மற்றும் அகல்யாவின் போன் நம்பரையும் ஒட்டுக் கேட்கிறார் செல்வம். இதில் திருமணமான பெண்களிடம் மோசமாக பேசி வலைவிரிக்கும் பாலகிருஷ்ணன்(பிரசன்னாவை) பால்க்கி என்று அழைக்கப்படுபவரை கண்டு பிடிக்கிறார். ஒரு நாள் பால்க்கி , அகல்யாவிடம் பேசுவதையும் கேட்டு அதிர்ச்சியடையும் செல்வம் அவரை போலீஸ் வைத்து அடிக்கிறார். செல்வம் செய்யும் வேலைகள் பற்றிய தகவல்களை சேகரித்து அவரை பழிவாங்க முயற்சிக்கிறார் பால்க்கி. இன்னொரு பக்கம் அகல்யாவை அடையவும் முயற்சிக்கிறார். பிறகு வருவது க்ளைமேக்ஸ். வித்யாசாகர் நீண்ட இடைவேளைக்கு பிறகு கலக்கியுள்ளார், அதிலும் பின்னணி இசையில் ஒலிக்கும் அந்த திருட்டு பயலே பாடல் ரசிக்க வைக்கின்றது, செல்லத்துரை ஒளிப்பதிவும் சிறப்பு.ன்னணி கதாபாத்திரங்களாக நடித்திருந்த, எம்.எஸ்.பாஸ்கர், `பினாமி சேட்ஜி' பிரதீப் கே விஜயன், முத்துராமன் மூவருடைய நடிப்பும் நன்றாக இருந்தது.விவேக் மற்றும் ரோபோசங்கரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்[1][2].
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161104010914/http://www.sify.com/movies/susi-is-back-amala-paul-in-thiruttu-payale-2-news-tamil-qk5iNrbdjdghi.html.
- ↑ http://www.indiaglitz.com/vivek-and-robo-shankar-in-thiruttu-payale-2-bobby-simha-amala-paul-prasanna-tamil-news-170297.html