திருக்குற்றால நாதர் உலா
திருக்குற்றால நாதர் உலா என்னும் நூல் திரிகூடராசப்பரின் பதினான்கு படைப்புகளில் ஒன்றாகும்.
இலக்கிய வகை
திருக்குற்றால நாதர் உலா என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான "உலா" என்ற வகையில் பாடப்பெற்றுள்ளது. பாட்டுடைத் தலைவர் வீதியில் உலா வருகையில் அவரைக்காணப்பெறும் பெண்கள் அவர் மீது மையல் கொண்டு அவரது அழகினையும், புகழினையும், தன் காதலை அவர் உணராது தமக்கு பசலை நோய் வரும் தன்மையினையும் பாடுவதாக இருக்கும்.
நூலின் அமைப்பு
இந்நூலின் பாட்டுடைத் தலைவரான குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கும் திருக்குற்றால நாதர் உலா வருகிறார். இதை கட்டியக்காரன் பறை சாற்றி அறிவிக்கிறான். அவரைக் கண்ட பெண்டிர் அவர் மீது காதல் கொண்டு தன் நிலையினை உரைப்பது போலவும், அவர்கள் அவர்பால் பசலை கொள்வது போன்றும் செய்யுள் நடையில் இயம்பியுள்ளார் ஆசிரியர் [1].
செய்யுள் வகை
இதில் பல பா வகைகளினை எளிய நடையில் திரிகூடராசப்பர் கையாண்டுள்ளார்.