தியா ( 2020 கன்னடத் திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தியா
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்கெ.எஸ்.அசோகா
தயாரிப்புடி.கிருஷ்ண சைத்தன்யா
கதைகெ.எஸ்.அசோகா
இசைபி. அஜ்னீஷ் லோக்நாத்
நடிப்புகுஷீரவி
ப்ருத்வி அம்பர்
தீக்ஷித் ஷெட்டி
ஒளிப்பதிவுவிஷால் விட்டல்
சௌரப் வாக்மரே
படத்தொகுப்புநவீன்ராஜ்
விநியோகம்கெ.ஆர்.ஜெ ஸ்ட்டுடியோஸ்
வெளியீடுபெப்ரவரி 7, 2020 (2020-02-07)
ஓட்டம்136 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிகன்னடம்

தியா (கன்னடம்: ದಿಯಾ) என்பது 2020 ஆம் ஆண்டு வெளியான கன்னட மொழி காதல் திரைப்படமாகும். 7 பிப்ரவரி 2020 இல் வெளியான இத்திரைப்படம் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்கள் பெற்றதோடு தென்னிந்தியா முழுவதும் பிரபலமானது.[1]

கதை

மிகுதியாக பேசும் குணம் இல்லாத உயிரித்தொழில்நுட்பம் பயிலும் மாணவி தியா ஸ்வரூப், அதே படிப்பில் மூத்த ஆண்டில் பயிலும் ரோஹித் மீது மையல் கொள்கிறாள். சூழ்நிலையால் ரோஹித் கல்லூரி விட்டு நீங்க, மூன்று ஆண்டுகள் கழித்து ரோஹித்தை திவ்யா தான் வாழும் அடுக்குமாடிக் குடியிருப்பின் எதிர்வீட்டில் காண்கிறாள்.

ரோஹித்தும் தான் அவளைக் காதலித்ததாக ஒப்புக்கொள்ள, இருவரும் தத்தம் வீட்டில் பேசி திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். ஆனால் ஒருநாள் அவர்கள் வெளியே செல்லும் போது வண்டி விபத்தில் சிக்கி ரோஹித் இறந்துவிடுகிறான். மனமுடைந்து போன தியா தற்கொலை செய்ய முயற்சிக்கும் போது அவளை தடுத்து நிறுத்துகிறான் ஆதி.

ஆதியின் உதவியுடன் ஒரு புது வாழ்க்கையை தொடங்கவிருக்கும் தியா அவனுடன் காதல் வயப்படும் வேளையில் ரோஹித் உயிருடன் இருப்பதை தெரிந்து கொள்கிறாள். மீண்டுவந்த ரோஹித் நின்றுபோன திருமண ஏற்பாடுகளை மீண்டும் தொடங்கி வைக்க, முக்கோணக் காதலில் சிக்கித் தவிக்கும் தியாவின் நிலை என்ன என்பதே கதை.

நடிப்பு

தியா
என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்தார்
குஷீரவி
இந்த கதாப்பாத்திரம் மிகுதியாக பேசாத தன்னை அதிகம் வெளிப்படுத்திக் கொள்ளாத ஒரு கதாபாத்திரம்.
ஆதி
என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்தார்
ப்ருத்வி அம்பர்
இந்த கதாப்பாத்திரம் மிகவும் கலகலப்பான வாழ்க்கையை நேர்மறையாக மட்டுமே பார்க்கும் ஒரு அருமையான கதாபாத்திரம்.
ரோஹித்
என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்தார்
தீக்ஷித் ஷெட்டி
தியா போன்றே மிகுதியாக பேசாத தன்னை அதிகம் வெளிப்படுத்திக் கொள்ளாத ஆண் கதாபாத்திரம்.
லக்கி
என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்தார்
பவித்ரா லோக்கேஷ்
இந்த கதாப்பாத்திரம் தன் மகன் ஆதி மீது உயிரையே வைத்திருக்கும் அம்மா கதாபாத்திரம்.

இசை

இத்திரைப்படத்தில் பாடல்கள் இடம்பெறவில்லை எனினும் மறுவெளியீட்டின் போது புதிய பாடல்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்தவர் பி.லோக்நாத்.

தியா
ஒலித்தடம்
பி. அஜ்னீஷ் லோக்நாத்
வெளியீடு2020
ஒலிப்பதிவு2020
இசைப் பாணிதிரைப்பட ஒலித்தடம்
தடப்பட்டியல்
# பாடல்வரிகள்பாடகர் நீளம்
1. "சோல் ஆஃப் தியா"  தனஞ்செய் ரஞ்சன்சின்மயி, சன்ஜித் ஹெக்டே 3:35


வெளியீடு

6-5=2 என்கிற கன்னட பேய் படத்திற்கு பிறகு கே.எஸ்.அசோக் இயக்கிய இரண்டாவது திரைப்படம் தியா.[2] இந்தத் திரைப்படம் பெங்களூர், கார்வார், மும்பை உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு 7 பிப்ரவரி 2020 அன்று கருநாடகம் முழுவதும் வெளியானது.

கொரோனா ஊரடங்கால் நின்றுபோன திரை ஓட்டம், அந்த கால கட்டம் முடிந்ததும் புதிய முடிவோடும் பாடல்களோடும் மறுவெளியீட்டிற்காக காத்திருக்கிறது தியா. ப்ருத்வி அம்பர் தன் கதாபாத்திரத்தை மீள்நடிக்க இந்தியிலும் தெலுங்கிலும் தியா மறு ஆக்கம் செய்யப்பட்டு வருகிறது.[3][4]

மார்ச் 8 2020 அன்று இத்திரைப்படம் மேலதிக ஊடக சேவைத் தளம், செயலி மற்றும் மென்பொருளான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. தொலைக்காட்சி உரிமைகள் ஃஜீ கன்னடா என்கிற அலைவரிசை வசம் உள்ளது.

விமர்சனம்

தியா திரைப்படத்திற்கு பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்தன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்