தா. ச. துரைராசா
Jump to navigation
Jump to search
தா. ச. துரைராசா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியலாளர். தமிழ்க் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் நீண்ட காலம் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினராகவும், 7 சனவரி1961 முதல் 12 பெப்ரவரி 1962 வரை ஒரு தடவையும், 15 மே 1963 முதல் 6 மே 1964 வரை இன்னொரு தடவையுமான இரண்டு தடவைகள் யாழ்ப்பாண மாநகர முதல்வராகவும்[1] பணியாற்றியவர்.
குடும்பம்
இவர், நாகேஸ்வரி என்பவரைத் திருமணம் செய்தார். வவுனியா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினரும், கல்விக்கான இராசாங்க அமைச்சராகப் பணியாற்றியவருமான இராஜமனோகரி புலேந்திரன் இவர்களது மகளாவார். இவரது மருமகன் கே. டி. புலேந்திரனும் வவுனியா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராகவும், வவுனியா நகர மன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
மேற்கோள்கள்
- ↑ "யாழ் மாநகர சபை இணையத்தளம் - முன்னைய முதல்வர்கள்". Archived from the original on 2016-04-30. பார்க்கப்பட்ட நாள் 2016-10-03.