தாழம்பூர்
தாழம்பூர் Thazhambur | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 12°51′18″N 80°12′25″E / 12.854900°N 80.207000°ECoordinates: 12°51′18″N 80°12′25″E / 12.854900°N 80.207000°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | படிமம்:TamilNadu Logo.svg தமிழ்நாடு |
ஏற்றம் | 29 m (95 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அருகிலுள்ள ஊர்கள் | மூலச்சேரி, ஒட்டியம்பாக்கம், சிட்லப்பாக்கம், சிறுசேரி, நாவலூர், செம்மஞ்சேரி, கோவிலஞ்சேரி, மாம்பாக்கம், கரணை, பொன்மார், அரசன்கழனி மற்றும் பெரும்பாக்கம் |
மாவட்ட ஆட்சித் தலைவர் | எ. ஆர். ராகுல் நாத், இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | தென் சென்னை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | சோழிங்கநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | தமிழச்சி தங்கப்பாண்டியன் |
சட்டமன்ற உறுப்பினர் | எஸ். அரவிந்த் ரமேஷ் |
தாழம்பூர் (English: Thazhambur) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3] சென்னையின் தென்பகுதியில் சோழிங்கநல்லூருக்கும் நாவலூருக்கும் இடையில் தாழம்பூர் உள்ளது. ஐ. டி. காரிடார் பழைய மகாபலிபுரம் சாலைக்கு அருகாமையில் இருப்பதால், தாழம்பூர் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 29 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தாழம்பூர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 12°51′18″N 80°12′25″E / 12.854900°N 80.207000°E ஆகும். மூலச்சேரி, ஒட்டியம்பாக்கம், சிட்லப்பாக்கம், சிறுசேரி, நாவலூர், கோவிலஞ்சேரி, மாம்பாக்கம், கரணை, பொன்மார், அரசன்கழனி, பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி, ஆகியவை தாழம்பூர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். 76 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி ஒன்று தாழம்பூரில் உள்ளது.[4]
தரமணி, சோழிங்கநல்லூர், ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் காரப்பாக்கம் போன்ற நன்கு அறியப்பட்ட வேலைவாய்ப்பு மையங்களுக்கு, தாழம்பூர் நல்ல இணைப்பைக் கொண்டுள்ளது.
இங்கிருந்து அருகில் உள்ள பகுதிகளுக்கு எளிதில் செல்ல மாநகரப் பேருந்து சேவைகள் உள்ளன. சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் தாழம்பூரில் இருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது.
எச். சி. எல் இன்டர்நேஷனல் பள்ளி, அமேதிஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளி, கே. சி. உயர் சர்வதேச பள்ளி மற்றும் கேட்வே சர்வதேச பள்ளி போன்ற பல சர்வதேச பள்ளிகள் இங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன.
Gleneagles உலகளாவிய சுகாதார நிறுவனம், நரம்பியல் மற்றும் முதுகெலும்பு கோளாறுகள் மருத்துவ நிறுவனம், செட்டிநாடு ஹெல்த் சிட்டி மற்றும் அருண் மருத்துவமனை ஆகியவை தாழம்பூரில் இருந்து சுமார் 10 கி.மீ. சுற்றளவில் மருத்துவ சேவைகள் வழங்குகின்றன.
தாழம்பூருக்கு அருகில் காசாகிராண்ட் ரிட்ஸ், காசாகிராண்ட் பெவிலியன், ரூம்ஸ்கேப்ஸ் வில்லேஜ், எஸ். கே. சி. அபரா மற்றும் எஸ். எஸ். பி. டி. எல். லேக்வுட் என்க்ளேவ் போன்ற பல மதிப்புமிக்க குடியிருப்புகள் உள்ளன.
விவிரா மால், மெரினா மால், பி. எம். ஆர். மால், கே. வி. பி. வளாகம் மற்றும் க்ளோரி மதர் ட்ரெடிஷனல் உள்ளிட்ட அனைத்து ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்குத் தேவைகளுக்காகவும் 3 கி.மீ. தொலைவில் வணிக வளாகங்கள் அமைந்துள்ளன.
தாழம்பூரில் அமையப் பெற்றுள்ள பிடாரி பிள்ளையார் கோயில்[5] மற்றும் பிடாரி அம்மன் கோயில்[6] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன.
மேற்கோள்கள்
- ↑ சந்திரமூர்த்தி, மா (2003) (in ta). தமிழ்நாட்டுச் சிவாலயங்கள். மணிவாசகர் பதிப்பகம். https://books.google.com/books?id=bZDXAAAAMAAJ&q=%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B4%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D&dq=%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B4%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwjbytKl4pT9AhVL_XMBHQuEAMAQ6AF6BAgHEAM#%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B4%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D.
- ↑ Madras (India : State) (1963) (in en). Fort Saint George Gazette. https://books.google.com/books?id=OnplZRCBWCUC&q=%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B4%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D&dq=%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B4%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwjbytKl4pT9AhVL_XMBHQuEAMAQ6AF6BAgKEAM#%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B4%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D.
- ↑ P, Purushothaman (2022-12-24) (in ta). அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழன் எழுதிய அ-ஆ-அய்யா. Purushothaman P. https://books.google.com/books?id=Y9KjEAAAQBAJ&pg=PA83&dq=%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B4%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwjbytKl4pT9AhVL_XMBHQuEAMAQ6AF6BAgDEAM#v=onepage&q=%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B4%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D&f=false.
- ↑ "தாழம்பூர் ஏரியில் கொட்டப்படும் குப்பையால் சுற்றுச்சூழல் பாதிப்பு" (in ta). https://www.hindutamil.in/news/tamilnadu/802022-garbage-dumped-in-thalampur-lake.html.
- ↑ "Arulmigu Pidaari Pillaiyaar Temple, Thazhambur - 603103, Chengalpattu District [TM003117.,"]. https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=3117.
- ↑ "Arulmigu Pedaariyamman Temple, Thazhambur - 603103, Chengalpattu District [TM003063.,"]. https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=3063.