தாசி ஜாங்மோ
| தாசி ஜாங்மோ | |
|---|---|
| பிறப்பு | அண். 1963 (அகவை 62–63) வாம்ராங், திராசிகேங் மாவட்டம் பூட்டான் |
| தேசியம் | பூட்டானியர் |
| படித்த கல்வி நிறுவனங்கள் | மத்திய உயர் திபெத்திய ஆய்வுகள் நிறுவனம் மவுண்ட் ஹோலியோக் கல்லூரி மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகம் |
| விருதுகள் | மேரி லியோன் விருது |
தாசி ஜாங்மோ (Tashi Zangmo) (பிறப்பு 1963) ஒரு பூட்டானிய செயற்பாட்டாளர் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு முதல் பூட்டானின் கிறித்தவப் பெண் துறவிகள் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார்.
தொடக்க கால வாழ்க்கை மற்றும் தொழில்
சாங்மோ 1963 ஆம் ஆண்டில் பூட்டானின் வாம்ராங்கில் பிறந்தார். இவர் தனது கிராமத்திலிருந்தும் வீட்டிலிருந்தும் பள்ளிக்குச் சென்ற முதல் பெண் ஆவார் .[1] இவர் தனது படிப்பை முடித்த பிறகு 1980 ஆம் ஆண்டுகளில் குடிமைப் பணித்துறையில் செயலாளராகப் பணியாற்றினார்.
இவர் இந்தியா மற்றும் அமெரிக்காவில் கல்வி பயின்று பட்டங்களைப் பெற்றார். இவர் வாரணாசியில் உள்ள மத்திய உயர் திபெத்திய ஆய்வுகள் நிறுவனத்தில் இருந்து புத்தவியல் பட்டமும், மாசசூசெட்ஸில் உள்ள மவுண்ட் ஹோலியோக் கல்லூரியில் மேம்பாட்டு ஆய்வுகளில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். பின்னர் இவர் அம்ஹெர்ஸ்டில் உள்ள மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார். படிப்புக்குப் பிறகு, இவர் பூட்டான் திரும்பி வந்து பூட்டானின் கிறித்தவப் பெண் துறவிகள் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரானார். ஷெரிங் யாங்டனின் ஆதரவின் கீழ் 2009 ஆம் ஆண்டில் பூட்டானின் கிறித்தவப் பெண் துறவிகள் அறக்கட்டளை நிறுவப்பட்டது.[2]
2018 ஆம் ஆண்டில் பிபிசியின் 100 பெண்களில் ஒருவராக இவர் பட்டியலிடப்பட்டார்.[3]
மேற்கோள்கள்
- ↑ Caitlin Dwyer (2018-05-16). "Changing Mindsets: Tashi Zangmo and the Bhutan Nuns Foundation". Buddhist Door (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2018-12-29.
- ↑ Sonam Yangdon (2018-11-27). "I would like to see nuns make it to the 'BBC 100 women' list in the future: Dr. Tashi Zangmo" (in en-GB). The Bhutanese. https://thebhutanese.bt/i-would-like-to-see-nuns-make-it-to-the-bbc-100-women-list-in-the-future-dr-tashi-zangmo/.
- ↑ "BBC 100 Women 2018: Who is on the list?" (in en-GB). BBC News. 2018-11-19. https://www.bbc.com/news/world-46225037.