தலேர் மெகந்தி
Jump to navigation
Jump to search
தலேர் மெகந்தி | |
---|---|
எசுப்பானியாவின் மத்ரித்தில் தலேர் மெகந்தியின் நிகழ்ச்சி | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | தலேர் சிங் |
பிறப்பு | 18 ஆகத்து 1967 பட்னா, பீகார், இந்தியா |
பிறப்பிடம் | புது தில்லி, இந்தியா |
இசை வடிவங்கள் |
|
தொழில்(கள்) | பாடகர், பாடலாசிரியர், இசைத்தட்டு வெளியீட்டாளர் |
இசைத்துறையில் | 1995–நடப்பில் |
வெளியீட்டு நிறுவனங்கள் |
|
இணைந்த செயற்பாடுகள் | மிகா சிங், அன்சு ராஜ் அன்சு |
இணையதளம் | www |
தலேர் சிங் (Daler Singh) பரவலாக மேடைப் பெயர், "தலேர் மெகந்தி" (பிறப்பு 18 ஆகத்து 1967) இந்திய இசைப்பதிவுக் கலைஞர், இசைக்கலைஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், இசைத்தட்டு தயாரிப்பாளர், நிகழ்ச்சியாளர் மற்றும் சூழலியலாளர். உலகெங்கும் பங்கராவை பரப்பியதற்காக அறியப்படுகின்றார். தலேருக்கு முன்பாக பரவியிருந்த இந்தித் திரைப்பட இசைக்கு மாற்றாக திரையிசை இல்லா இசைவகையை பரப்பியதற்கும் புகழ்பெற்றவர். தனித்துவமான குரலுடன் ஆற்றல்மிகு நடனப் பாடல்களால் உணர்ச்சிமிகு பாடல்களை வழங்கும் இந்தியப் பரப்பிசைக் கலைஞராகவும் அறியப்படுகின்றார்.[1] இவரது தலைப்பாகையும் நீண்ட தவழும் உடைகளும் தனி அடையாளங்களாக உள்ளன.[2]
மேற்சான்றுகள்
- ↑ "An Aureate Voice – Daler Mehndi". dalermehndi.com. Archived from the original on 2015-06-17. பார்க்கப்பட்ட நாள் 2016-07-07.
- ↑ "I'm proud to be from Bihar: Daler Mehndi". hindustantimes.com. 26 March 2013. Archived from the original on 21 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 22 July 2014.