தர்மகிரி
Jump to navigation
Jump to search
தர்மகிரி தமிழ்நாடு, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு ஊர். இவ்வூர் கூடலூரிலிருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இவ்வூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2007-ஆம் ஆண்டில் அப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 2009-ஆம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது தொடக்கப்பள்ளியில் 60 மாணவர்களும் உயர்நிலைப்பள்ளியில் 91 மாணவர்களும் பயின்று வருகின்றனர்.
தர்மகிரியில் ஒரு பழமை வாய்ந்த கிறித்தவத் தேவாலயம் ஒன்று உள்ளது. பெரும்பாலான மக்கள் மலையாள மொழி பேசுகின்றனர். மக்களின் முக்கிய தொழில் விவசாயம். காபி, தேயிலை ஆகியன முக்கிய பயிர்கள் ஆகும்.