தருமராஜ் டி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தருமராஜ் டி
இயற்பெயர்/
அறியும் பெயர்
பேராசிரியர்
தருமராஜ் டி
பிறந்ததிகதி சூன் 19, 1967 (1967-06-19) (அகவை 57)
பிறந்தஇடம் தமிழ்நாடு, இந்தியா
பணி பேராசிரியர், எழுத்தாளர்
தேசியம் இந்தியர்
கல்வி முனைவர்
அறியப்படுவது நாட்டுப்புறவியல், தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம்
இணையதளம் tdharumaraj

தருமராஜ் டி (ஆங்கில மொழி: Dharmaraj T), நாட்டுப்புறவியல் மற்றும் தமிழ் பௌத்தம் சார்ந்து இயங்கும் ஒரு தமிழ் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். நாட்டுப்புறவியல், தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம், நாட்டார் வழக்கியல்[1][2] உள்ளிட்ட துறைகளில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி வருபவர். இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் ஆவார்.  ஜெர்மனியிலுள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்திலும், டியூபிங்கன் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர்.[3] இவர் எழுதிய 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் தமிழ்ச் சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியது.[4][5][6]

கல்வி

இவர் புனித சேவியர் கல்லூரியில் நாட்டுப்புறவியல் துறையில் 1990ஆம் ஆண்டு முதுகலை பட்டம் பெற்றார். ஜே. என். யூ. பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையில் 1997ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

எழுதிய நூல்கள்

  • அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை [7]
  • தமிழ் நாட்டுப்புறவியல் [8][9]
  • நான் ஏன் தலித்தும் அல்ல? [10][11]
  • இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை? [12]
  • உள்ளூர் வரலாறுகள் [13]
  • கலகக்காரர்களும் எதிர்க் கதையாடல்களும் [14]
  • கபாலி: திரைக்கதையும் திரைக்கு வெளியே கதையும்

மேற்கோள்கள்

  1. "Bhogi's place in Tamil tradition".
  2. Jun 16, Srikkanth D. / TNN / Updated:; 2020; Ist, 10:36. "Tamil Nadu: English names changed, but caste tags remain a blot | Chennai News - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-10-05. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)
  3. "MKU-School of Performing Arts". mkuniversity.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-27.
  4. "அயோத்திதாசர்,டி.தர்மராஜ் | எழுத்தாளர் ஜெயமோகன்". www.jeyamohan.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  5. Leonard M., D. (2017). One Step Inside “Tamilian”: On the Anti-Caste Writing of Language. Social Scientist, 45(1/2), 19–32. http://www.jstor.org/stable/26380327
  6. Leonard D. Caste-Less Tamils and Early Print Public Sphere: Remembering Iyothee Thass (1845–914). South Asia Research. 2021;41(3):349-368.
  7. https://www.hindutamil.in/news/opinion/columns/535797-dharmaraj-interview.html
  8. https://www.dinamani.com/specials/nool-aragam/2021/apr/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3611965.html
  9. https://books.dinamalar.com/details.asp?id=26126
  10. https://books.google.com/books?id=Jp1dDwAAQBAJ&pg=PT7&lpg=PT7&dq=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2?&source=bl&ots=rJYbcF0lhP&sig=ACfU3U0Z3RCzgWg0oVR8Mtp2utBDS-zuwg&hl=en&sa=X&ved=2ahUKEwjBmKXbjrPzAhURKn0KHfQECz84ChDoAXoECAgQAw#v=onepage&q=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%3F&f=false
  11. https://books.dinamalar.com/details.asp?id=23958
  12. https://www.dinamani.com/specials/nool-aragam/2021/apr/05/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-3598070.html
  13. https://books.google.com/books?id=_ADk5ezwL-IC&pg=PA18&lpg=PA18&dq=%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&source=bl&ots=OCK1dGCMCA&sig=ACfU3U37LGnTLLr-yRBhrqluy_w_FY32-Q&hl=en&sa=X&ved=2ahUKEwizk7qoj7PzAhVILTQIHaclDkEQ6AF6BAgIEAM#v=onepage&q=%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&f=false
  14. https://www.nlb.gov.sg/biblio/11167477
"https://tamilar.wiki/index.php?title=தருமராஜ்_டி&oldid=4399" இருந்து மீள்விக்கப்பட்டது