தம்மனூர்
தம்மனூர் | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 12°45′46″N 79°48′47″E / 12.76278°N 79.81306°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ் நாடு |
| மாவட்டம் | காஞ்சிபுரம் மாவட்டம் |
| தாலுகா]] | வாலாசாபாத்து |
| மொழிகள் | |
| • அலுவலக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தம்மனூர் (Thammanur) என்பது இந்தியாவின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[1] காஞ்சிபுரம் அருகே உள்ள வாலாசாபாத்து நகரிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் (2.5 மைல்) தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. தம்மனூர் கிராமத்தின் மக்கள் தொகை சுமார் 2500 ஆகும். இது வாலாசாபாத்திலிருந்து இளையனார் வேலுருக்கு (முருகன் கோவிலுக்கு பெயர் பெற்றது) செல்லும் வழியில் அமைந்துள்ளது. கிராமத்தில் ஒரு பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.[2] 12 மற்றும் 13 ஆம் நுற்றாண்டு காலத்தில் பிற்கால சோழர்களால் கட்டப்பட்ட ஒரு பழங்கால சிவன் கோவில் ஒன்றும் (ஏகாம்பரேசுவரர்) இங்குள்ளது. இக் கோவிலானது பசுமையான, நெல் மற்றும் கரும்பு வயல்களால் சுழப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இக்கிராமத்தின் 526 வீடுகளில் 2116 வசித்தனர்.[3]
மேற்கோள்கள்
- ↑ "வாலாஜாபாத் - அவளூர் சாலையில் - போக்குவரத்து துண்டிப்பால் : 10 கிராம மக்கள் அவதி :". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/todays-paper/regional02/740006-.html. பார்த்த நாள்: 25 October 2025.
- ↑ <span%2520class="HIGHlight">SCHOOLS "Kancheepuram Panchayat Union Middle School students at Thammanur village near Walajabad, being trained in computer... | The Hindu Images". thehinduimages.com. Retrieved 2025-10-25.
- ↑ "Census of India Website : Office of the Registrar General & Census Commissioner, India". Census of India Website. Retrieved 2021-05-03.