தமிழ் மலர் (மலேசியா)
வகை | நாளிதழ் |
---|---|
வடிவம் | அகன்ற தாள் |
உரிமையாளர்(கள்) | ஓம்ஸ். தியாகராஜன் |
வெளியீட்டாளர் | சிட்டி டீம் மீடியா CITY TEAM MEDIA SDN BHD |
ஆசிரியர் | கிருஷ்ணன் மணியம் சரசுவதி கந்தசாமி |
நிறுவியது | 14 ஏப்ரல் 2013 |
அரசியல் சார்பு | மலேசிய, உலக அரசியல் செய்திகள் |
மொழி | தமிழ் |
தலைமையகம் | கோலாலம்பூர், மலேசியா |
விற்பனை | 22,000/நாளொன்றுக்கு, 35,000/வாராந்திரம் |
ISSN | வார்ப்புரு:ISSN search link |
இணையத்தளம் | https://tamilmalar.com.my/ |
தமிழ் மலர் (மலேசியா) (ஆங்கிலம்: Tamil Malar); மலேசியாவில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ். மலேசியத் தமிழர்களுக்காக மலேசியச் செய்திகள்; தமிழ் நாட்டுச் செய்திகள்; உலகச் செய்திகள்; விளையாட்டுச் செய்திகள்; சிறப்புக் கட்டுரைகள் போன்றவற்றை வெளியிடுகிறது.
இதன் உரிமையாளர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ். தியாகராஜன்.[1]
இதன் தலைமையகம் கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் உள்ளது. இதன் நிர்வாக இயக்குநராக பெரியசாமி முனுசாமி பொறுப்பு வகிக்கிறார். [2]
உள்ளடக்கம்
தமிழ் மலர் நாளிதழ் மலேசிய இந்தியச் சமூகத்தைப் பற்றிய செய்திகளுக்கு முன்னுரிமை வழங்கி வருகின்றது. தவிர உள்ளூர்ச் செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவை பிரசுரிக்கப் படுகின்றன.
மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. இந்த நாளிதழ் ’உண்மையின் உரைகல்’ எனும் அடைமொழியுடன் பவனி வருகின்றது.
உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் கொள்கையில் உள்ளூர் எழுத்தாளர்களின் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் போன்றவற்றை ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிட்டு வருகிறது.
ஒவ்வொரு நாளும் சிறப்புக் கட்டுரை எனும் பக்கத்தில் வரலாற்றுச் சமூக கட்டுரைகளையும் பிரசுரித்து வருகிறது.
மேற்கோள்கள்
- ↑ தமிழ் மலர் பத்திரிக்கையின் நிறுவனரும், பல்வேறு இந்திய சமூக நற்பணிகளுக்கும், மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் நிறைய நன்கொடைகளை வழங்கி வருபவர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன்.
- ↑ "The daily's executive director Periasamy Munisamy said the newspaper, which was also popular in Singapore, had been given a new lease of life with a unique content and latest format to cater for people from all walks of life". Archived from the original on 2019-08-25. பார்க்கப்பட்ட நாள் 2019-08-25.