தமிழ் தியாகராஜன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தமிழ் தியாகராஜன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
தமிழ் தியாகராஜன்
பிறந்ததிகதி 6 சூன் 1989 (1989-06-06) (அகவை 35)
பிறந்தஇடம் சென்னை, இந்தியா
பணி திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர்
துணைவர் புனிதவதி

தமிழ் தியாகராஜன் ஒரு தமிழ் திரைப்பட இயக்குநரும், திரைப்படத் தயாரிப்பாளரும் மற்றும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். குறிப்பாக இவர் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றுகிறார்.

வாழ்க்கை மற்றும் தொழில்

தமிழ் தியாகராஜன் 06 ஜூன் 1989 அன்று தமிழ்நாட்டில் ( இந்தியா ) ஜெயம்கொண்டத்தில் பிறந்தார். அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், பிறகு சென்னையில் குடிசார் பொறியியல் படிக்கச் சென்றார். தனது கல்லூரி படிப்பிற்கு பிறகு சில ஆண்டுகள் தனியார் நிறுவனத்தில் உள்ள மென்பொருள் துறையில் பணியாற்றினார். சுயதீன திரைப்படத்தை இயக்கவும் தயாரிக்கவும், தான் வேலை செய்துக்கொண்டு இருந்த மென் பொருள் வேலையை துறந்து தன்னை 2013க்கு பிறகு முழுமையாக திரைத்துறைக்கு மாற்றிக்கொண்டார். அதன் பிறகு சோதனை முயற்சியாக சில குறும்படங்கள் இயக்கினார். மேலும் இவர் தமிழ் மொழி குறும்படமான டோனா 2014 உருவாக்கினார் (மே 2015 இல் கேன்ஸ் திரைப்பட விழாவில் குறும்படப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டது.[1] ).[2][3][4]

வாழ்க்கை

தமிழ் தியாகராஜன் புனிதவதி என்பவரை மணந்தார்.[5]. இவர் தேசிய அளவில் பல பதங்கங்களை கராத்தே மூலமாக பெற்றார். இவர் கராத்தேவின் மூன்றாவது டான். இவர் தற்பொழுது சென்னையில் காவலராக பணி  புரிகிறார்.

திரை வாழ்க்கை

ஆண்டு தலைப்பு என வரவு வைக்கப்பட்டது குறிப்புகள்
இயக்குனர் திரைக்கதை எழுத்தாளர் தயாரிப்பாளர்
2014 ஆரியர் (குறும்படம்) ஆம் ஆம் ஆம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் ஸ்டோன் பெஞ்ச் குறும்பட தொகுப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2015 டோனா [6] (குறும்படம்) ஆம் ஆம் ஆம் 2014 ஆம் ஆண்டில் கேன்ஸ் திரைப்பட விழாவில் குறும்பட பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2015 84 மிமீ (குறும்படம்) ஆம் ஆம் ஆம்
2022 குதிரைவால் இல்லை இல்லை இல்லை படத்தில் நன்றி கொடுக்கப்பட்டுள்ளது.
2023 1848 (திரைப்படம்) [7][8][9][10] ஆம் [11][12][13] இல்லை இல்லை

குறிப்புகள்

  1. "Cannes 2015: Nomination Boost for Indie Filmmakers, Says Donna Director". பார்க்கப்பட்ட நாள் 2023-09-05.
  2. "பூஜையுடன் தொடங்கிய ஜுனியர் எம்.ஜி.ஆர். படத்தின் படப்பிடிப்பு!". பார்க்கப்பட்ட நாள் 2023-09-05.
  3. "ஜூனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!!". பார்க்கப்பட்ட நாள் 2023-09-05.
  4. "Indian Short Film For Cannes". பார்க்கப்பட்ட நாள் 2023-09-05.
  5. "Constable wins four medals at police karate championship" (in en-IN). The Hindu. 2015-09-05. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/todays-paper/. 
  6. Dinamalar (2015-02-17). "பிரான்ஸ் திரைப்பட விழாவில் தேர்வான டோனா குறும் படம்! | Dona short film selected for France film festival". தினமலர் - சினிமா. பார்க்கப்பட்ட நாள் 2024-06-30.
  7. "1848 Movie first look". பார்க்கப்பட்ட நாள் 2023-09-05.
  8. "இயக்குநரின் குரல்: முருகனை மீட்கப் புறப்பட்ட பெண்!". பார்க்கப்பட்ட நாள் 2023-11-08.
  9. Zee Music South (2024-06-07), 1848 - Official Movie Trailer | Krisha Kurup, Junior MGR, Anand Babu, Kadhal Sugumar | Hariharasudan, பார்க்கப்பட்ட நாள் 2024-06-12
  10. DIN (2024-06-08). "1848 படத்தின் டிரெய்லர்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-06-12.
  11. "ஜுனியர் எம்.ஜி.ஆர் நடிக்கும் புதிய படம்!". பார்க்கப்பட்ட நாள் 2023-09-05.
  12. "ஜுனியர் எம்.ஜி.ஆர். படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது". பார்க்கப்பட்ட நாள் 2023-09-05.
  13. "கிரைம் திரில்லராக உருவாகவுள்ள படத்தில் முக்கிய வேடத்தில் ஜீனியர் எம்.ஜி.ஆர் !". பார்க்கப்பட்ட நாள் 2023-09-05.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தமிழ்_தியாகராஜன்&oldid=21050" இருந்து மீள்விக்கப்பட்டது