தமிழர்விக்கி:ஒத்தாசைப் பக்கம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

தமிழர்விக்கிவுக்குப் பொருத்தமாகக் கட்டுரை எழுதுவது என்று ஐயமா? பக்கங்களைத் தொகுப்பதில் சிக்கலா? உங்களுடைய கேள்விகளை இங்கே கேளுங்கள்.

கேள்விகளை எழுத, இப் பக்கத்தின் மேற்பக்கத்தில் உள்ள "தலைப்பைச் சேர்" என்பதை அழுத்துங்கள். கேள்வியை எழுதுவதற்கான கட்டம் திறக்கும். அக் கட்டத்தில் உங்கள் கேள்விகளை எழுதுங்கள். தமிழில் எழுதுவது நல்லது. தமிழில் எழுத இயலாவிட்டால் ஆங்கிலத்திலும் எழுதலாம். எழுதிய பிறகு கீழே காணும் "பக்கத்தைச் சேமிக்கவும்" என்ற பொத்தானை அழுத்தவும்.



"ஆம், இல்' எனும் சொற்களின் பயன்பாடு

வணக்கம், கட்டுரையில் ஆம், இல் எனும் சொற்களை நூற்றாண்டுகளோடு அல்லது ஆண்டுகளோடு குறிப்பிடுகையில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனக் கூறவும். உதாரணமாக நூற்றாண்டுகளைக் குறிப்பிடும் போது 19-ஆம் நூற்றாண்டு , 19 ஆம் நூற்றாண்டு, 19ஆம் நூற்றாண்டு, 19ம் நூற்றாண்டு,19-ம் நூற்றாண்டு
ஆண்டுகளைக் குறிப்பிடுகையில் 2000-இல், 2000ல், மார்ச் 13, 2000 அன்று
இதில் எது சரி அல்லது பொருத்தமானது. இதற்கென இலக்கண விதிகள் ஏதும் உள்ளதா? அல்லது தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது என்பது குறித்து அறியத் தாருங்கள் .