தமாலம்
தமாலம் என்பது வெற்றிலைக் கொடி. இதனை இக்காலத்தில் தாம்பூலம் என்கிறோம். தக்கோலம் என்பது பாக்கு.[1]
தமாலம் என்பது ஒரு நறுமணமுள்ள கொடி. அது பசுமையான இலைகளைக் கொண்டது. இது ஆர் என்னும் ஆத்தி மரத்தில் ஏறிப் படர்ந்திருந்ததாம். அந்த மரத்தில் இருந்த கொம்புத்தேனை எடுக்க மலைநிலக் குறவன் ஏறினானாம். அப்போது அது சரிந்து விழுந்ததாம். [2]
கோவலன் பிரிந்தபோது மாதவி அவனுக்குக் முடங்கல்(கடிதம்) எழுதி அனுப்பினாள். முடங்கல் தாழைமடலில் எழுதப்பட்டது. அந்த முடங்கலை மலர்கள் பலவற்றின் நடுவில் வைத்து ஒப்பனை செய்த பின் தமாலக் கொடியால் சுற்றி அனுப்பியிருக்கிறாள். [3]
திருப்பதியில் தமாலம் [4]
சோழர் கால வாணிகப் பொருள்களில் ஒன்று தமாலம்.
படம்
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- ↑
தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடிப்
பொய்க்கோலம் செய்ய ஒழியுமே – எக்காலும்
உண்டி வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
கண்டுகை விட்ட மயல். - நாலடியார் - ↑
நெடுந்தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
பசுங்கேழ் இலைய நறுங்கொடித் தமாலம்
தீந்தேன் கொள்பவர் வாங்குபு பரியும். நற்றிணை 292-2 - ↑ கழுநீர், தமாலம், சண்பகம், மாதவி, தமாலம், கருமுகை, மல்லிகை, கத்திகை - சிலப்பதிகாரம் 8-45
- ↑ செய்தி