தன்வி ஷா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தன்வி ஷா
தன்வி ஷா.jpg
பின்னணித் தகவல்கள்
இசை வடிவங்கள்சர்வதேச ஒலிப்பதிவு கலைஞர்
தொழில்(கள்)பாடகி/ பாடலாசிரியர்
இணையதளம்tanvishah.com

தன்வி ஷா (Tanvishah) கிராமி விருதை வென்ற முதல் இந்தியப் பெண் பாடகி ஆவார். இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் பாடியுள்ளார். கூடுதலாக, எசுப்பானியம் , போர்த்துகீசியம் , மற்றும் பிற உரோமானிய மொழிகளிலும் , அரபு மொழிகளிலும் பாடுகிறார். இவரது "ஃபனா"என்ற முதல் பாடல் யுவா படத்தில் இடம் பெற்றது.

தொழில்

ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பல பாடல்களை இவர் பாடியுள்ளார். இதில் சில்லுனு ஒரு காதல், ஸ்லம்டாக் மில்லியனர் மற்றும் சமீபத்தில் தில்லி -6 படங்களின் பாடல்களும் அடங்கும். அவர் " ஜெய் ஹோ " பாடலுக்கான ஸ்பானிஷ் வரிகளை எழுதினார்.[1]

ஏ.ஆர்.ரஹ்மானுடனான அவரது வெற்றிக்குப் பிறகு முன்னணி இசையமைப்பாளர்களிடமிருந்து அவருக்கு அழைப்புகள் கிடைத்தன. அவர் யுவன் ஷங்கர் ராஜா, அமித் திரிவேதி மற்றும் பிற இசை இயக்குநர்களுக்காக பாடியுள்ளார்.

52 வது கிராமி விருதுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் குல்சர் ஆகியோருடன் விஷுவல் மீடியாவிற்கு எழுதிய சிறந்த பாடலுக்கான கிராமி விருதினைப் பகிர்ந்து கொண்டார், ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ என்ற பாடலில் பாடலுக்கான ஸ்பானிஷ் வரிகளை எழுதியதற்காக இவ்விருது பெற்றார். 2009 இல் கிராமி விருது தவிர, அவர் லண்டனில் பிஎம்ஐ விருது பெற்றார், மேலும் ரஹ்மான் மற்றும் குல்சருடன் உலக ஒலிப்பதிவு விருதினை (2009) பகிர்ந்து கொண்டார்.

ஜனவரி 2011 சென்னை மற்றும் மலேசியாவில் நடைபெற்ற ,யுவன் - லைவ் இன் கான்செர்ட்டில் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். 22 நவம்பர் 2013 அன்று ஐஐஎம் பெங்களூரில் கோக் ஸ்டுடியோ நிகழ்ச்சியில் அமித் திரிவேதியுடன் அவர் பாடியுள்ளார்.

இந்தியாவில் திரைப்படத் துறையில் பின்னணிப் பாடல்களைப் பாடுவதன் மூலம், அவர் ஒரு சர்வதேச நட்சத்திரமாக இருக்கிறார்.

குறிப்புகள்

  1. Tejonmayam, U (3 February 2009). "The Jai Ho girl". Express Buzz. The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 11 June 2009.
"https://tamilar.wiki/index.php?title=தன்வி_ஷா&oldid=8922" இருந்து மீள்விக்கப்பட்டது