தந்தை பெரியார் பாலம்
தந்தை பெரியார் பாலம் என்பது திருச்சி மாவட்டம் முசிறி, கரூர் மாவட்டம் குளித்தலையை இணைக்கும் பாலமாகும்.[1] இப்பாலம் அகன்ற காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் சுமார் 1.5 கிலோ மீட்டர் நீளமுள்ளது.
1971 இல் தமிழக முதல்வராக இருந்த ம. கோ. ராமச்சந்திரன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.[1] இப்பாலத்தை கட்ட 1.39 கோடி செலவிடப்பட்டுள்ளது. 1979 இல் தமிழக முதல்வராக இருந்த ம. கோ. ராமச்சந்திரன் தனது கையால் திறந்து வைப்பதை விட பாலத்தை கட்டியவர் திறப்பதே சிறந்தது என பிச்சையா மேஸ்திரி என்பவரை அழைத்து திறந்து வைத்தார் என்று கூறப்படுகிறது.
2007 இல் இப்பாலத்தை தமிழக அரசு 2.94 கோடி செலவில் சீரமைத்தது. [1]