தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி
Jump to navigation
Jump to search
வகை | இருபாலர், அரசினர் தன்னாட்சி கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1965 |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
முதல்வர் | ஜெ. சுகந்தி |
அமைவிடம் | , , |
இணையதளம் | www.periyarevrcollege.ac.in |
தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி (முன்பு பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி)(Thanthai Periyar Government Arts & Science College) இந்தியாவின் தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1965ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் பக்தவச்சலம் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இக்கல்லூரி தற்போது, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தன்னாட்சி கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[2]
வழங்கப்படும் படிப்புகள்
இளநிலைப் படிப்புகள்
- தமிழ் இலக்கியம்
- ஆங்கில இலக்கியம்
- வரலாறு
- பொருளியல்
- வணிகவியல்
- கணிதம்
- இயற்பியல்
- வேதியியல்
- தாவரவியல்
- விலங்கியல்
- புவியியல்
- கணினி அறிவியல்
- புள்ளியியல்
- காட்சித் தொடர்பியல் (Visual Communication)
இதனையும் காண்க
- தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல்
- திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்