தத்தைவிடு தூது

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தத்தை விடு தூது என்பது ஈழத்து திருகோணமலையைச் சேர்ந்த தி. த. சரவணமுத்துப்பிள்ளை (1863 - 1922) என்பவரால் 1892-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை செய்யுள்கள் ஆகும். இந்நூல் தமிழகத்தில் லிப்பன் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்டு வெளியானது.[1] பாரதியாரின் பெண் விடுதலை சார்ந்த சிந்தனைகளுக்கும் மூலமாக இருந்தது “தத்தை விடு தூது” என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.[சான்று தேவை]

இத்தூது இலக்கியம் காதலிலே தோல்வியுற்ற தலைவனின் மனஉணர்வுகளை வெளிப்படுத்துகிறது. காதலன் தனது காதலின் ஆழம், ஏக்கம், பாசம், ஏமாற்றம், போன்றவற்றைத் தத்தைக்குக் கூறுவதைச் செய்யுள்கள் காட்டுகின்றம.[1]

வேறு தகவல்கள்

  • “தத்தை விடு தூது” இலங்கைக் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள, புதிய பாடத்திட்ட (2016) நூலில் இடம்பெற்றுள்ளது.
  • புலவர் சரவணமுத்துப்பிள்ளையின் நெருங்கிய உறவினரும், எழுத்தாளருமான ந. பாலேஸ்வரி, இச்சிற்றிலக்கியத்தைத் தழுவி தத்தைவிடு தூது என்ற பெயரில் ஒரு புதின நூலை எழுதி 1992 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பாலேஸ்வரி, ந. (1992). "தத்தை விடுதூது". பார்க்கப்பட்ட நாள் 5 நவம்பர் 2017.
"https://tamilar.wiki/index.php?title=தத்தைவிடு_தூது&oldid=16708" இருந்து மீள்விக்கப்பட்டது