டி. தட்சிணாமூர்த்தி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

டி. தட்சிணாமூர்த்தி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் வசித்து வரும் இவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் பேராசிரியராகத் தன் பணியைத் தொடங்கித் தற்போது கல்லூரி முதல்வராகப் பணியாற்றி வருகிறார். இவர் ஜி. பாலன் என்பவருடன் இணைந்து எழுதிய “இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சட்டவியல், அரசியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

"https://tamilar.wiki/index.php?title=டி._தட்சிணாமூர்த்தி&oldid=4323" இருந்து மீள்விக்கப்பட்டது