டி. டி. வி. தினகரன்
டி.டி.வி.தினகரன் | |
---|---|
தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்[1] | |
பதவியில் 24 டிசம்பர் 2017 – 06 மே 2021 | |
முன்னையவர் | ஜெ. ஜெயலலிதா |
பின்னவர் | ஜே. ஜே. எபினேசர் |
தொகுதி | ஆர்.கே.நகர் |
இந்திய மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 2004–2010 | |
தொகுதி | தமிழ்நாடு |
இந்திய மக்களவை உறுப்பினர்[2] | |
பதவியில் 1999–2004 | |
முன்னையவர் | சேடபட்டி இரா. முத்தையா |
பின்னவர் | ஜே. எம். ஆரூண்ரஷீத் |
தொகுதி | பெரியகுளம் |
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் | |
பதவியில் 20 ஜூலை 2006 – 28 ஆகத்து 2007 | |
நியமித்தவர் | ஜெ. ஜெயலலிதா |
முன்னையவர் | திண்டுக்கல் சீனிவாசன் |
பின்னவர் | ஓ. பன்னீர்செல்வம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 திசம்பர் 1963 திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (2018 முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | அஇஅதிமுக (2017 வரை) சுயேச்சை (2017-2018) |
துணைவர் | அனுராதா |
உறவுகள் | வி. கே. சசிகலா |
பிள்ளைகள் | ஜெயஹரினி[3] |
பெற்றோர்s |
|
வாழிடம்(s) | அடையாறு, சென்னை, தமிழ்நாடு, இந்தியா[4] |
வேலை | அரசியல்வாதி |
மூலம்: [1] |
டி. டி. வி. தினகரன் (T. T. V. Dhinakaran,பிறப்பு: 13 திசம்பர், 1963) தமிழ்நாட்டு அரசியல்வாதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொருளாளரும் ஆவார்.[5] இவர் வி. கே. சசிகலாவின் மறைந்த அக்காளான வனிதாமணியின் மூன்று மகன்களில் மூத்தவர் ஆவார்.[6][7] இவரது தந்தை டி.விவேகானந்தம் முனையரையர் ஆவார்.[8]
டி. டி. வி. தினகரன் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு (1999–2004) பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 2004- (2004–2010)இல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9] அன்னியச் செலாவணி வழக்கில் தான் சிங்கப்பூர் நாட்டின் குடிமகன் என தினகரன் அறிவித்தார்.[10]
ஜெயலலிதாவால், டிசம்பர் 2011-இல் டி. டி. வி. தினகரன் உள்ளிட்ட வி. கே. சசிகலாவின் 12 குடும்ப உறுப்பினர்கள் நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்டனர்.[11] பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளாராகப் பதவி ஏற்றுக் கொண்ட வி. கே. சசிகலா, டி. டி. வி. தினகரனை, பிப்ரவரி 2017-இல் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.[12][13]
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அதிமுகவின் எடப்பாடி க. பழனிசாமி தலைமையிலான அரசை 18 பிப்ரவரி 2017-இல் சட்டமன்றத்தில் வெற்றி பெறச் செய்ததில் டி. டி. வி. தினகரன் பெரும்பங்காற்றியவர். இராதா கிருட்டிணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளராக போட்டியிட்டார்.[14] இத்தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவடா செய்ததாக எழுந்த புகாரில், இந்தியத் தேர்தல் ஆணையம் இத்தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்தது.[15]
23.11.17 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் இவரிடம் இருந்தது பரிக்கப்பட்டது அதில் இருந்து இது வரை சின்னம் இல்லாத கட்சி தலைவராக இருந்து வருகிறார்.[16]
21 திசம்பர், 2017 அன்று நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு 89,063 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[17]
பின்பு மார்ச்சு 15, 2018 அன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். அதிமுக மற்றும் இரட்டை இலைச் சின்னம் மீட்கப்படும் வரை தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்பதால் இக்கட்சியைத் தொடங்கினேன் என்று கூறினார்.[18]
வழக்குகள்
1996-ஆம் ஆண்டில் இவர் மீதான அந்நிய செலாவனி மோசடி வழக்கில் 2016-இல் அமலாக்கத் துறை 28 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.[19][20]
செயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட டி. டி. வி. தினகரன் பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.[21]
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தைத் தங்கள் அணிக்குப் பெறத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுக்க முயன்றார் என தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.[22] பின்பு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
- ↑ "Dhinakaran wins RK Nagar bypoll, creates history in Tamil Nadu". Pradeep Kumar. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 December 2017. பார்க்கப்பட்ட நாள் 24 December 2017.
- ↑ "Dhinakaran, Shri T. T. V. Lok Sabha Profile". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 25 August 2017.
- ↑ "குலதெய்வ கோவில் சபதம்...ஆட்சியை கவிழ்க்க தனி ஒருவனாக களமிறங்கும் தினகரன்".ஒன் இந்தியா (சனவரி 8, 2018)
- ↑ "Shri LED. T. V. Dhinakaran CMRajya Sabha profile". Rajya Sabha. Archived from the original on 27 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 25 August 2017.
- ↑ "பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்!". 2016-03-18. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2018.
- ↑ "டி.டி.வி. தினகரனின் பின்னணி". Archived from the original on 2017-02-17. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
- ↑ எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க.வை வழிநடத்தப்போகும் டி.டி.வி. தினகரனின் "தகுதி" என்ன தெரியுமா?
- ↑ "டி.விவேகானந்தம் முனையரையர்". தினத்தந்தி.
- ↑ http://research.omicsgroup.org/index.php/Rajya_Sabha_members_from_Tamil_Nadu[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ TTV Dinakaran: The nephew Sasikala believes in
- ↑ Jayalalithaa expels TTV Dinakaran
- ↑ VK Sasikala Placed Nephew In Charge Of Party. It Can't Get Enough Of Him
- ↑ Life and times of TTV Dinakaran — Sasikala's new pawn in TN's political battle
- ↑ RK Nagar bypoll: Dinakaran is AIADMK candidate
- ↑ பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை
- ↑ "இரட்டை இலை சின்னம் தீர்ப்பு".
- ↑ https://tamil.oneindia.com/news/tamilnadu/rk-nagar-counting-election-result-live-306109.html
- ↑ "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்': கட்சிப் பெயரை அறிவித்தார் டிடிவி தினகரன்; கொடியும் அறிமுகம்".
- ↑ "அன்னிய செலாவணி மோசடி வழக்கு: டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம்". Archived from the original on 2017-01-08. பார்க்கப்பட்ட நாள் 2018-02-04.
{{cite web}}
: Unknown parameter|access date=
ignored (|access-date=
suggested) (help)தினகரன் - ↑ டிடிவி தினகரன் திவாலானவரா? நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்
- ↑ How TTV Dinakaran got relief from Jayalalithaa wealth case
- ↑ "AIADMK's TTV Dinakaran Arrested At Midnight After 4 Days Of Questioning". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2017.
- வாழும் நபர்கள்
- 13வது மக்களவை உறுப்பினர்கள்
- 1963 பிறப்புகள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- திருவாரூர் மாவட்ட நபர்கள்
- 15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்