ஞான பறவை
இக்கட்டுரையின் தலைப்பு தமிழர்விக்கியின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ஞான பறவை | |
---|---|
படிமம்:ஞான பறவை.jpg | |
இயக்கம் | வியட்நாம் வீடு சுந்தரம் |
தயாரிப்பு | ஆர். தனபாலன் |
கதை | வியட்நாம் வீடு சுந்தரம் |
இசை | ம. சு. விசுவநாதன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | அ. வின்சென்ட் |
படத்தொகுப்பு | கெளதம் ராஜ் |
கலையகம் | யாகவா புரொடக்சன்சு |
வெளியீடு | சனவரி 11, 1991 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஞான பறவை (Gnana Paravai) வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில், 1991 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சிவாஜி கணேசன், ஹரிஷ் குமார், சசிகலா, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஆர். தனபாலன் தயாரிக்க, எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைக்க, 11 ஜனவரி 1991 ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியானது.[1][2][3]
நடிகர்கள்
சிவாஜி கணேசன், ஹரிஷ் குமார், சசிகலா, மனோரமா, ராஜசேகர், வி. கே. ராமசாமி, காந்திமதி, ராஜிவ், சின்னி ஜெயந்த், சார்லீ, கே. எஸ். ரகுராம், சுதா, ப்ரியா, சுதா, தில்லை ராஜன், குமரன், சக்தி தாமு, முத்துக்குமார், டாக்டர் ராஜேந்திரன், எம். எஸ். பாஸ்கர், பிரகாசம், மாஸ்டர் சரண்.
கதைச்சுருக்கம்
தான் பார்க்கும் நபர்களின் கண்களை வைத்து அவர்களின் சுபாவத்தையும், எதிர் காலத்தையும் கணிக்கத் தெரிந்த முதியவர் சிவாஜி (சிவாஜி கணேசன்) ஆவர். பணக்கார வீட்டைச் சேர்ந்த மாணவனான கிரி (ஹரிஷ் குமார்) தன் நண்பர்களுடன் அதிக பணம் செலவு செய்வதை வழக்கமாக கொண்டவன். சிவாஜியின் மகள் அருணாவை கிரி விரும்புகிறான். ஆனால், கிரியின் காதலை நிராகரித்து அவமானப்படுத்துகிறாள் அருணா. ஆனாலும் அருணாவை விட கிரிக்கு மனமில்லை. பின்னர், அருணாவும் அவளது தோழி ராஜேஸ்வரியும் நண்பர்களுடன் சுற்றுலா செல்கிறார்கள். கிரி அருணாவை பார்த்துவிட்டால், தன் நண்பர்களுடன் பணம் செலவு செய்ய மாட்டான் என்று அவனது நண்பன் ஆண்டவர் பயந்தான். பின்னர், கிரியும் ஆணடவரும் சேர்ந்து அருணாவை அவமானப்படுத்த திட்டம் தீட்டினர். கட்டுப்பாடு இல்லாத பெண் அருணா என்று கூற, அந்த அவப்பெயரை தாங்கமுடியாத அவள், உண்மையை நிலைநாட்ட தற்கொலை செய்துகொள்கிறாள். கிரிக்கும் ராஜேஸ்வரிக்கும் வெறுப்பு அதிகமானது.
இந்நிலையில், ராஜேஸ்வரியின் உறவினர் தினேஷ் (ராஜசேகர்) ராஜேஸ்வரியின் தங்கையை எரித்து விடுகிறான். ராஜேஸ்வரியை திருமணம் செய்ய தினேஷ் விரும்புகிறான். இறுதியில், சிவாஜியும் கிரியும் ராஜேஸ்வரிக்கு உதவ வருகிறார்கள். ராஜேஸ்வரிக்கு என்னவானது என்பதே மீதிக் கதை ஆகும்.
ஒலிப்பதிவு
5 பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 1991 ஆம் ஆண்டு வெளியானது. வாலி, வலம்புரி ஜான், காமகோடியன் எழுதிய பாடல் வரிகளுக்கு, ம. சு. விசுவநாதன் இசை அமைத்திருந்தார்.[4]
- ஆணவம்
- சின்ன சின்ன
- காலை மாலை
- மாக்கு மாக்கு
- சொல்லித்தர நானிருக்கேன்
மேற்கோள்கள்
- ↑ "spicyonion.com".
- ↑ "cinesouth.com". Archived from the original on 2007-08-15. பார்க்கப்பட்ட நாள் 2019-02-27.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "entertainment.oneindia.in". Archived from the original on 2014-07-26. பார்க்கப்பட்ட நாள் 2019-02-27.
- ↑ "indiaglitz.com".