ஜி. ராமகிருஷ்ணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜி. ராமகிருஷ்ணன்
செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு‍ மாநிலக்குழு‍
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சிபிஐ(எம்)
பதவியில்
பிப்ரவரி 12, 2010
முன்னையவர்என்.வரதராஜன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புthumb
சூன் 6, 1949 (1949-06-06) (அகவை 75)
மேமானூர், விழுப்புரம்
இறப்புthumb
Ramakrishnan.G
இளைப்பாறுமிடம்thumb
Ramakrishnan.G
அரசியல் கட்சிசிபிஐ(எம்)
துணைவர்sரீடா
பிள்ளைகள்வாஞ்சிநாதன் & சுபாஷினி
பெற்றோர்
  • thumb
  • Ramakrishnan.G
வாழிடம்sமேமானூர், விழுப்புரம், தமிழ்நாடு‍

ஜி. ராமகிருஷ்ணன் (பிறப்பு: சூன் 6, 1949) தமிழக அரசியல்வாதியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராவார்[1]

வாழ்க்கை குறிப்பு

இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், மேமாளூர் கிராமத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.[2]

கல்வி


ஆரம்பப்பள்ளி - மேமாளூர் கிராமம் அரசு ஆரம்பப்பள்ளி மேனிலைக்கல்வி - மேமாளூர் கிராமத்திற்கு 2 கி.மீ. தூரம் அளவில் உள்ள ஜி.அரியூர் (திருக்கோவிலூர் தாலுகா) உயர்கல்வி - பி.யூ.சி., (காஞ்சிபுரம், பச்சையப்பா கல்லூரி), பி.ஏ., (வரலாறு) - அரசு கலைக்கல்லூரி, சென்னை பி.எல். - சென்னை, சட்டக்கல்லூரி

அரசியல் வாழ்க்கை

1969-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் ஆனார். சென்னையில் படிப்பை முடித்த பின் கடலூரில் 8 ஆண்டு காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர்கள் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்னாற்காடு மாவட்டச் செயலாளராகவும், அகில இந்திய நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1981-ம் ஆண்டு முதல் கட்சியின் முழு நேர ஊழியராகப் பணியாற்றி வருகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான சி.ஐ.டி.யு. வின் தென்னாற்காடு மாவட்டச் செயலாளராகவும், அதன் மாநிலத் துணைத் தலைவராகவும் செயல்பட்டார். இப்போது நெய்வேலி சி.ஐ.டி.யு. சங்கத்தின் கௌரவத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
1989-ம் ஆண்டு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ராமகிருஷ்ணன், 2008-ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாட்டில் மத்திய குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

சிபிஐ(எம்)-ன் தமிழ்நாடு மாநிலச் செயலாளர்

2010 ஆம் ஆண்டு முதல் இன்று வரை மாநிலச் செயலாளராக இருந்து வரு‍கிறார்.மணல் கொள்ளை குறித்து அறிக்கை வெளியிட்டதால் அவர் மீது சூலை 25 , 2014 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார் .[3]

ஆதாரம்

  1. http://cpim.org/leadership
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-27. பார்க்கப்பட்ட நாள் 2013-07-15.
  3. "மணல் கொள்ளை குறித்து அறிக்கை  : ஜி.ராமகிருஷ்ணன் மீது முதல்வர் ஜெயலலிதா 'அவதூறு' வழக்கு ::". தீக்கதிர். 26 சூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2014.[தொடர்பிழந்த இணைப்பு]

வார்ப்புரு:இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

"https://tamilar.wiki/index.php?title=ஜி._ராமகிருஷ்ணன்&oldid=28140" இருந்து மீள்விக்கப்பட்டது