ஜிஹாத் (கொழும்பு சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஜிஹாத் கொழும்பிலிருந்து 1967ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும்.

சிறப்பு

தமிழ், ஆங்கில இருமொழிகளையும் இவ்விதழ் கொண்டிருந்தது

ஆசிரியர்

ஆரம்பத்தில் மாஹிர் என்பவரும், பின்னர் மானா மக்கீன் என்பவரும் ஆசிரியராக இருந்துள்ளனர்.

நிறுவனர்

  • அல்ஹாஜ் எம். எச். முஹம்மது

பொருள்

'ஜிஹாத்' என்றால் 'புனிதப்போர்' என்று பொருள்படும்

உள்ளடக்கம்

இவ்விதழில் இசுலாமிய ஆய்வுக் கட்டுரைகளும், விமர்சனங்களும், செய்தி அறிக்கைகளும், இசுலாமிய கொள்கைகளுக்கு எதிர்ப்பான கருத்துகளுக்கான விளக்கவுரைகளும் இடம்பெற்றிருந்தன.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்