ஜானகி சபேஷ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜானகி சபேஷ்
Janaki Sabesh Image.jpg
பிறப்பு16 டிசம்பர் 1964
இந்தியா
பணிஊடகவியலாளர், கதை சொல்லுபவர், எழுத்தாளர், நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1992–தற்போது வரை
பிள்ளைகள்1

ஜானகி சபேஷ் (Janaki Sabesh) இந்தியாவைச் சேர்ந்த ஊடகவியலாளரும், நடிகையும், வடிவழகியும், கதைசொல்லுபவரும், குழந்தைகள் புத்தகம் எழுதுபவரும், நாடகக் கலைஞரும் மற்றும் குரல் கலைஞரும் ஆவார்.[1] இவரது திரைப்பட வாழ்க்கை முழுவதும், இவர் பல முன்னணி நடிகர்களுக்கு “தாயாக” நடித்துள்ளார்.[2] ஜானகி பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களிலும் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் தோன்றினார்.

ஆரம்பகால வாழ்க்கை.

ஜானகி, பெங்களூரில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை கொல்கத்தாவின் கார்மெல் பள்ளியிலும், பின்னர் புது தில்லியின் டி. டி. இ. ஏ மேல்நிலைப் பள்ளியிலும் முடித்தார். தில்லியின் சீமாட்டி சிறீ ராம் கல்லூரியில் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டமும், தில்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் தகவல்தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.[3] பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ இவரது மைத்துனியாவார்

தொழில் வாழ்க்கை

1991 இல், ஜானகி சபேஷ், சிமி கரேவாலுக்கு இராஜீவ் காந்தி பற்றிய இந்தியாவின் ராஜீவ் என்ற ஆவணப்படத்திற்கு உதவினார்.[3][4]கஜோல் மற்றும் அரவிந்த்சாமி நடித்த மின்சார கனவு திரைப்படத்தில் இவர் கன்னியாஸ்திரியாக அறிமுகமானர். பின்னர் ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராயின் அம்மாவாக நடித்தார். அதன் பிறகு, மின்னலே மற்றும் கில்லி உட்பட 25 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவற்றில் பெரும்பாலும் அம்மா வேடத்தில் நடித்தார்.

காட்பரிஸ், பெப்சோடன்ட், கேஎஃப்ஜே, என்ஏசி ஜூவல்லர்ஸ், சக்ரா கோல்ட் டீ, ஜான்சன்ஸ் தோத்தி போன்ற முன்னணிப் பொருட்களின் விளம்பரங்களிலும் நடித்துள்ளார். ஸ்ட்ரே ஃபேக்டரி என்ற வலைத் தொடரிலும் தோன்றினார். நாடகக் கலைஞராக சென்னையை தளமாகக் கொண்ட நாடகக் குழுக்கள், கிரியா-சக்தி & மெட்ராஸ் பிளேயர்ஸ் ஆகியோருடன் சேர்ந்து நாடகங்களிலும் நடித்தார். ஜானகி சபேஷ் கதை மற்றும் பாடல்கள் மூலம் எண்களின் உலகத்தை குழந்தைகளுக்க அறிமுகப்படுத்து தி லேர்னிங் ட்ரெயின் (1995) என்ற ஒலி வடிவத்தை தயாரித்தார்.

ஜானகி தனது சொந்த கதை சொல்லும் முயற்சியான கோல்போ - டேல்ஸ் அன்லிமிடெட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். வங்காள மொழியில் கோல்போ என்ற சொல்லுக்கு "கதை" என்று பொருள். இவர் கதை, இசை மற்றும் இயக்கம் ஆகியவற்றை இதன் மூலம் சொல்லி வருகிறார். மேலும், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான உந்துதல் மற்றும் கதைசொல்லலின் பயனுள்ள பயன்பாடுகளை மையமாகக் கொண்ட பட்டறைகளையும் நடத்துகிறார்.

ஜானகி சபேஷ், 9 மொழிகளில் துலிகா புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்ட தனது முதல் படப் புத்தகமான தி ஜங்கிள் ஸ்டோரிடெல்லிங் ஃபெஸ்டிவல் மூலம் 2018 இல் எழுத்தாளராக மாறினார். இவரது 2வது படப் புத்தகமான பதியின் ரசம் (துவானி சபேஷ் உடன் இணைந்து எழுதியது) 2023 இல் சிறந்த குழந்தைகள் புத்தக விருதை வென்றது. மேலும் நீவ் புத்தக விருதுகள் 2022 இல் பட்டியலிடப்பட்டது (முதல் 3).

மேற்கோள்கள்

  1. "From 'Ghilli' amma to children's writer, meet Janaki Sabesh in her new avatar". 15 August 2018.
  2. Deepa Venkatraman (2013-06-15). "It's all in the mind". The Hindu. http://www.thehindu.com/features/cinema/its-all-in-the-mind/article4817321.ece. 
  3. 3.0 3.1 Y. Sunita Chowdhary (2010-05-24). "Exuding positivity". The Hindu. http://www.thehindu.com/features/cinema/article436966.ece. 
  4. "India's Rajiv - Credits (1:01:20)". Youtube. Archived from the original on 2017-04-06. பார்க்கப்பட்ட நாள் 17 March 2017.

பத்திரிகைக் கட்டுரைகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜானகி_சபேஷ்&oldid=23458" இருந்து மீள்விக்கப்பட்டது