ஜவாஹிருல்லா
மு. ஹி. ஜவாஹிருல்லா | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2021–2026 | |
தொகுதி | பாபநாசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூலை 22, 1959 உடன்குடி, தூத்துக்குடி |
அரசியல் கட்சி | மனிதநேய மக்கள் கட்சி |
துணைவர் | நிறைவுமுசீரா |
பிள்ளைகள் | 1மகள் |
வாழிடம் | சென்னை |
முனைவர் பேராசிரியர் மு. ஹி. ஜவாஹிருல்லா (M. H. Jawahirullah) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக உள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
1985 முதல் கல்லூரி பேராசிரியராக, வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் வணிகவியல் துறையில் பணியாற்றி 2009 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வுப்பெற்றார். 1996 ஆம் ஆண்டில் தமுமுகவின் தலைவராக பொறுப்பேற்றார்.
சட்டமன்ற உறுப்பினர்
2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாபநாசம் தொகுதியிலிருந்து திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.[2]
வழக்கும் தண்டனையும்
1997ல் கோவையில் நிகழ்ந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக தமுமுக நிவாரண நிதி வசூலித்து வழங்கியது. அப்போது வெளிநாட்டில் வாழும் தமிழக முஸ்லிம்களிடம் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெறாமல் வசூலித்ததாக 2011 ஆம் ஆண்டு தமுமுக நிர்வாகிகள் ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, சையது நிசார் அகமது, ஜி. எம். ஷேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோர் மீது மத்தியப் புலனாய்வுத் துறை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் இவர்களுக்கு ஓராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து சென்னை மத்தியப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்த போது தமுமுக நிர்வாகிகளின் ஓராண்டுத் தண்டனையை நீதி மன்றம் உறுதி செய்தது.[3][4][5] பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தமுமுக நிர்வாகிகள் மேல் முறையீடு செய்ததால் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.[6] [7] [8]
மேற்கோள்கள்
- ↑ "Profile". தமிழ்நாடு சட்டமன்றம் இம் மூலத்தில் இருந்து 6 பெப்ரவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120206125543/http://www.assembly.tn.gov.in/members/profile/211.html. பார்த்த நாள்: 2 நவம்பர் 2016.
- ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html. பார்த்த நாள்: 2021-05-07.
- ↑ "வெளிநாட்டில் இருந்து ரூ1.55 கோடி அனுமதியின்றி வசூல்: ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை உறுதி Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/cbi-court-confirms-one-year-jail-term-jawahirullah-286621.html". ஒன் இந்தியா இணையத்தளம். http://tamil.oneindia.com/news/2011/10/01/mmk-leader-m-h-jawahirullah-jailed-for-1-year-aid0176.html. பார்த்த நாள்: 19 சூன் 2017.
- ↑ "ஜவாஹிருல்லாவுக்கு சிறை உறுதி: சென்னை கோர்ட் அதிரடி". தினமலர் இணையத்தளம். http://www.dinamalar.com/news_detail.asp?id=1794042. பார்த்த நாள்: 19 சூன் 2017.
- ↑ "வெளிநாட்டில் இருந்து ரூ1.55 கோடி அனுமதியின்றி வசூல்: ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை உறுதி Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/cbi-court-confirms-one-year-jail-term-jawahirullah-286621.html". ஒன் இந்தியா இணையத்தளம். http://tamil.oneindia.com/news/tamilnadu/cbi-court-confirms-one-year-jail-term-jawahirullah-286621.html. பார்த்த நாள்: 19 சூன் 2017.
- ↑ "ஜவாஹிருல்லா உள்பட 5 பேருக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.". தினத்தந்தி. http://www.dailythanthi.com/News/State/2017/07/01015031/The-sentence-suspended-by-the-Court-of-Justice.vpf. பார்த்த நாள்: ௦01 சூலை 2017.
- ↑ "ஜவாஹிருல்லா உள்பட 5 பேர் தண்டனைநிறுத்தி வைப்பு.". தினமணி. http://www.dinamani.com/tamilnadu/2017/jul/01/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2729589.html. பார்த்த நாள்: ௦01 சூலை 2017.
- ↑ "மனித நேய மக்கள் கட்சி தலைவரின் தண்டனை நிறுத்தி வைப்பு". தினமலர். http://www.dinamalar.com/special_detail.asp?id=1802237&Print=1. பார்த்த நாள்: 01 சூலை 2017.