ஜலக் மன் கந்தர்வா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜலக் மன் கந்தர்வா
பிறப்பு(1935-07-29)சூலை 29, 1935
இறப்புபட்லோசர், பொக்காரா, நேபாளம்
தேசியம்நேபாளம்
குடியுரிமைநேபாளி
செயற்பாட்டுக்
காலம்
1965 - 2003
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்கிராமிய இசை
மேல்நாட்டுச் செந்நெறி இசை
இசைக்கருவி(கள்)
  • குரலிசை , சாரங்கி வசித்தல்
வெளியீட்டு நிறுவனங்கள்
  • ஜலக் மன் கந்தர்வா

ஜலக் மன் கந்தர்வா (Jhalak Man Gandarbha) (சூலை 29, 1935/12 வைசாக்கி 1922 – நவம்பர் 23, 2003  ) நேபாள நாட்டுப்புற பாடகர்களில் மிக முக்கியமானவர். அவர் கெய்ன் கீதம் அல்லது கந்தர்வ சங்கீதத்துக்காக பிரபலமாக இருந்தார். இது ஒரு பிரபலமான நாட்டுப்புற பாடல், நேபாளத்தின் கெய்ன் அல்லது கந்தர்வ இனத்தவர்கள் மட்டுமே பாடியது. கெய்ன் பாடலைப் பதிவுசெய்த முதல் கெய்ன் பாடகரான இவர், பழங்குடி மற்றும் சாதாரண மக்களின் குரலை வெகுஜன ஊடகங்களில் கொண்டுவந்ததற்காக மதிக்கப்படுகிறார். அமலே சோத்லின் நி ... (மாமா கேட்கலாம் ...) எனற பாடல் இவரது மிகவும் பிரபலமான பாடலாகும். இது நேபாள சிப்பாய் வெளிநாட்டு போர்க்களத்தில் இறந்ததைக் குறிக்கிறது. [1] [2] [3] [4]

ஜலக் மன் கந்தர்பா 1935 ஆம் ஆண்டில் கந்தர்வக் குலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த இவர், தனது தந்தையிடமிருந்து ஆரம்பத்தில் பாடவும், நடனமாடவும், இசையை வாசிக்கவும் கற்றுக்கொண்டார். தனது வாழ்வாதாரத்திற்காக ஒன்பது வயதிலிருந்தே நேபாள கிராமங்களில் பாடத் தொடங்கினார். கந்தர்வர்கள் ஜியாவேர், கியாலி கீதம், மற்றும் கர்கா போன்ற பல்வேறு வகையான நாட்டுப்புற இசைகளை இசைக்கிறார்கள் (ஒருவரின் செயல்களைப் புகழ்ந்து எழுத எழுதப்பட்ட பாடல்கள்). இவர்கள் தெய்வங்களுக்காகவும் இசைக்கிறார்கள். இவர்களிடம் சாரங்கி என்ற தனித்துவமான நான்கு சரம் கொண்ட கருவி உள்ளது. இவர்கள் சாரங்கியை இசைத்து, கிராமத்தைச் சுற்றி பாடுகிறார்கள். இதனால் சமூகத்தை மகிழ்விக்கிறார்கள்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஜலக்_மன்_கந்தர்வா&oldid=7739" இருந்து மீள்விக்கப்பட்டது