ஜகாட்
ஜாகட் | |
---|---|
இயக்கம் | சஞ்சய் குமார் பெருமாள்[1] |
தயாரிப்பு | டத்தோ ஸ்ரீ அ அனந்தன் (ஏ. ஜி. ஸ்டடியூ& சில்வர்வேர்) மை ஸ்கில் போண்டஷன்
ஸ்கைசென் ஸ்டூடியோ மகேஸ்வரி அனந்தன் |
கதை | சஞ்சய் குமார் பெருமாள் |
இசை | ஸ்பைஸ் கம்பூஸ் எஸ்பிரிமெண்ட்[2] |
நடிப்பு | ஜிப்ரயில் ராஜ்குல ஹர்விந்த ராஜ் குபேன் மஹாதேவன் தினேஷ் சாரதி கிருஷ்ணன் செந்தில் குமரன் முனியாண்டி |
ஒளிப்பதிவு | செந்தில் குமரன் முனியாண்டி |
படத்தொகுப்பு | குமரன் ஆறுமுகம் |
கலையகம் | ஸ்கைசென் ஸ்டூடியோ |
விநியோகம் | ஸ்கைசென் ஸ்டூடியோ |
வெளியீடு | திசம்பர் 17, 2015 |
ஓட்டம் | 90 நிமிடங்கள் |
நாடு | மலேசிய |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | RM300,000[3] |
ஜகாட் என்னும் சொல் மலாய் மொழியில் ஜஹாட் (jahat) எனும் வார்த்தையிலிருந்து மருவி ஜகாட் என்ன உச்சரிக்கப்படுகின்றது. இது 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மலேசியத் தமிழ் திரைப்படமாகும். இப்படத்தை சஞ்சய்குமார் பெருமாள் இயக்கினார். 1990ஆம் ஆண்டு மலேசியத் தமிழர்களால் எதிர்நோக்கப்பட்ட இயல்பு பிரச்சினைகளை மையக்கருவாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டது.[சான்று தேவை] .
அப்போய் என்னும் 12வயது சிறுவன், அவன் தந்தை மணியம் மற்றும் மாமா பாலா ஆகிய முக்கிய கதாபாத்திரங்களை கொண்டு தோட்டப்புறத்திருந்து நகருக்கு இடம் மாறும்பொழுது ஏற்படக்கூடிய பிரச்சனைகளை இப்படம் இயல்பாகச் சித்தரிக்கின்றது.
சஞ்சய் குமார் பெருமாள் இரண்டு ஆண்டுகள் குடிசை வீடுகளில் வாழ்ந்த அனுபவத்தைக் கொண்டு இந்த படத்தை இயக்கியதாகக் குறிப்பிடுகிறார்.[4]
இந்தத் திரைப்படமானது 2016 ஆம் ஆண்டில் 28 வது மலேசியத் திரைப்பட விழாவில் சிறந்த மலேசியத் திரைப்பட விருது பெற்றது, அதேசமயம் அதன் இயக்குநர் சஞ்சய் குமார் பெருமாள் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றார்.[5] . இந்த படம் 2017 ஆம் ஆண்டு ஆசியான் திரைப்பட விழாவில், மலேசியாவை பிரதிநிதித்து ஒளியேற்றப்பட்டது.[6]
வரவேற்பு
இந்த திரைப்படம் டிசம்பர் 17, 2015 அன்று வெளியிடப்பட்டது. இது மலேசியாவில் தயாரிக்கப்படும் சிறந்த தமிழ் மொழி திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[7][8] ஸ்டார் வார்ஸ்: த ஃபோர்ஸ் அவேகன்ஸ் மற்றும் பசங்க 2 போன்ற பெரிய திரைப்படங்களிடம் இருந்து தீவிர போட்டியை எதிர்கொண்ட போதிலும், இந்தத் திரைப்படம் மிதமான வெற்றியைபெறமுடிந்தது. எட்டு வாரம் தொடர்ந்து திரையரங்குகளில் ஒளியேற்றப்பட்ட முதல் உள்ளூர்த் தமிழ்திரைப்படம் என்ற பெருமையையும் இந்த ஜாகட் படம் கொண்டுள்ளது.
ஏப்ரல் 2019 முதல் நெட்ஃபிக்ஸ் மூலம் இந்த படத்தை உலகெங்கிலும் காண முடியும்.[9]
பாராட்டுக்களை
விருது | வகை | விளைவாக |
---|---|---|
28 வது மலேசிய திரைப்பட விழா [10] | | சிறந்த படம் | Won |
சிறந்த இயக்குனர் | Won | |
சிறந்த திரைக்கதை | Nominated | |
2016 கோலாலம்பூர் பிலிம் கிரிடிக்ஸ் விருது [11] | சிறந்த திரைப்படம் | Won |
சிறந்த இயக்குனர் | Won | |
சிறந்த ஆண் நடிகர் | Won | |
சிறந்த ஒளிப்பதிவு | Won | |
சிறந்த திரைக்கதை | Won |
மேற்கோள்கள்
- ↑ "Director's Profile | Jagat". Jagatthemovie.com. Archived from the original on 20 December 2015. பார்க்கப்பட்ட நாள் 18 December 2015.
- ↑ ""JAGAT" Original Motion Picture Soundtrack, by ஸ்பைஸ் கம்பூஸ் எஸ்பிரிமெண்ட் Experiment". Space Gambus Experiment Bandcamp site. பார்க்கப்பட்ட நாள் 18 September 2016.
- ↑ Keanu Azman (5 December 2015). "Local film 'Jagat' costs "roughly RM300,000", tells tale of 90's Indian community". The Daily Seni. The Daily Seni. Archived from the original on 9 December 2015.
- ↑ (in en-US).
- ↑ "'Jagat' bags top film award, creates history". Star Media Group Berhad. 4 September 2016. பார்க்கப்பட்ட நாள் 18 September 2016.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-07-02. பார்க்கப்பட்ட நாள் 2019-05-23.
- ↑ K. Anand (23 December 2015). "Jagat, a harsh dose of reality that works". Edge Insider Sdn Bhd. Archived from the original on 30 December 2015. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
- ↑ Yeoh, Angelin (19 December 2015). "Review: Jagat". Star Media Group Berhad. Archived from the original on 9 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2019.
- ↑ "'Jagat' makes it to Netflix". Star Media Group Berhad. பார்க்கப்பட்ட நாள் 17 May 2019.
- ↑ "Finas cancels all non-BM awards for FFM". Malay Mail Online. பார்க்கப்பட்ட நாள் 19 August 2016.
- ↑ "Keputusan Anugerah Majlis Pengkritik Filem Kuala Lumpur 2016". பார்க்கப்பட்ட நாள் 30 November 2016.