ச.பா இராகி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சபா இராகி
Saba Raagi
இயற்பெயர்/
அறியும் பெயர்
சபா இராகி
Saba Raagi
பிறப்புபெயர் சபா. இராமகிருட்டிணன்
பிறந்தஇடம் அலோர் ஸ்டார், கெடா
பணி அச்சுத்தொழில்
தேசியம் மலேசியர்
கல்வி பட்டாணி பாரா
தோட்டத் தமிழ்ப்பள்ளி

சுங்கை பட்டாணி,
08000 கெடா,
கூன் ஆங்கிலக் கல்வி நிலையம்
பணியகம் சொந்தத் தொழில்
அறியப்படுவது மலேசியத் தமிழ் சிறுகதை எழுத்தாளர்
பெற்றோர் சங்கரபிள்ளை
பாருவதி
துணைவர் அன்னலெட்சுமி
பிள்ளைகள் 5 பிள்ளைகள்
சரவணன்
செந்தில்நாதன்
குமரன்
விமலன்
ராமஜனனி

சபா இராகி எனும் சபா. இராமகிருட்டிணன் மலேசியத் தமிழ் எழுத்தாளர். சிங்கை, மலேசிய நாளிதழ்களில் 50க்கும் மேற்பட்ட சமூகச் சீர்திருத்தச் சிறுகதைகளை எழுதியவர். மலேசியத் தமிழ்மொழிச் சார்ந்தவர்களுக்கு விழிப்புணர்வு தொடர்பான கருத்துகளைப் பரப்புரை செய்து வருகின்றார். மலேசியத் தாளிகைகளில் பல சீர்திருத்தக் கருத்துக்களையும் பகுத்தறிவுக் கட்டுரைகளையும் எழுதியவர்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் பலரின் எழுத்துப் படிவங்களைத் தொகுப்புகளாகவும், நூல்களாகவும் அச்சிட்டு வெளியிட்டுள்ள இவர், சொந்தமாக அச்சு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். குறைந்த செலவில் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை அச்சிட்டு வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

டாக்டர் மு. வரதராசன் இலக்கியப் பயணம்

1962 இல் டாக்டர் மு. வரதராசன் அவர்கள் மலேசியா தைப்பிங் வருகை தந்த போது, அவருடன் சபா இராகிக்கு இலக்கியத் தொடர்புகள் ஏற்பட்ட்டன.

மலேசியாவில் தமிழ்வேள் கோ. சாரங்கபாணி ஏற்பாடு செய்த தமிழர் திருநாள் இலக்கியப் பயணத்தில் டாக்டர் மு. வரதராசன் அவர்களுடன் இணைந்து ஈப்போ, சித்தியவான், பட்டர்வொர்த், பினாங்கு போன்ற நகரங்களில் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பு செய்துள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1962 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், சீர்திருத்தக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

"https://tamilar.wiki/index.php?title=ச.பா_இராகி&oldid=6218" இருந்து மீள்விக்கப்பட்டது