சோழன் நல்லுருத்திரன்

சோழன் நல்லுருத்திரன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகப் புறநானூறு 190 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

கலித்தொகை முல்லைக்கலி பாடிய புலவர் நல்லுருத்திரனார். புறநானூறு 190 பாடலைப் பாடிய புலவர் சோழன் நல்லுருத்திரன்.

உருத்திரன் என்னும் சொல் சூரியனையும், சிவபெருமானையும் குறிக்கும்.

புறம் 190 பாடல் சொல்லும் செய்தி

  • துறை - பொருண்மொழிக் காஞ்சி (நன்னெறி வாழ்க்கை)

கதிர்கள் விளைந்திருக்கும் காலத்தில் எலி கதிர்களைக் கடித்துச் சென்று தன் வளையில் பதுக்கி வைத்துக்கொள்ளும். எலியைப் போன்று உள்ளத்தில் உரமில்லாத பதுக்கலாளர்ளின் நட்பு அமையாதிருப்பதாகுக.

புலி ஒன்று காட்டுப் பன்றி ஒன்றை வீழ்த்தியது. அப் பன்றி இடப்பக்கமாக விழுந்தது. (வலப்பக்கமாக விழுந்தால்தான் உண்ணுமாம்) எனவே புலி அன்று முழுவதும் பட்டினி கிடந்து மறுநாள் வேட்டையாடிற்று. அண்யானை ஒன்றை வலப்புறமாக விழும்படி வீழ்த்தியது. இரையாக்கிக்கொண்டது. இந்தப் புலியைப் போன்ற நெஞ்சுரம் கொண்டவர்களின் நட்பு அமைவதாகுக.

"https://tamilar.wiki/index.php?title=சோழன்_நல்லுருத்திரன்&oldid=11927" இருந்து மீள்விக்கப்பட்டது