சோலை சுந்தரபெருமாள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சோலை சுந்தரபெருமாள் (Solai Sundaraperumal), (இறப்பு: 12 சனவரி 2021)[1] தன் தொட்டில் பூமியான தஞ்சை மண்ணின் நேசத்தை படைப்புகளில் வெளிப்படுத்தும் தேர்ந்த படைப்பாளி. விவசாயம் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையை, வலியை, கொண்டாட்டத்தை மாறாத வட்டார மொழியில் எழுதிவரும் இவர் ஒரு பள்ளி ஆசிரியர். இவரது கீழவெண்மணி சம்பவத்தை மையப்படுத்திய ‘செந்நெல்’ நாவல் இலக்கிய விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.[2] திருவாரூருக்கு அருகில் உள்ள காவனூர் என்ற சிறு கிராமத்தில் வசித்து வந்தார்.

படைப்புகள்

1989 `தலைமுறைகள்’ - முதல் சிறுகதை 1989 இல் `தாமரை` இலக்கிய இதழில் வெளிவந்தது. இம்மண்ணுக்குப் பஞ்சம் பிழைக்க வந்து, சாலை அமைப்புப்பணியில் ஈடுபட்ட ஒட்டர் சமூகத் தொழிலாளிகளின் வாழ்வியலைப் பின்னணியாகக் கொண்ட சிறுகதை. அம்மாத இதழில் வெளிவந்த சிறந்த சிறுகதையாகத் தேர்வு பெற்று `ஈ.எஸ்.டி’ நினைவுப் பரிசினைப் பெற்றது.
1980 முதல் படைப்புப் பயிற்சியில் விளைந்த கதைகள் `பொன்னியின் காதலன்’ (மரபுக்கவிதை) `ஓ செவ்வந்தி’ `நீரில் அழும் மீன்கள்’ `மரத்தைத் தாங்கும் கிளைகள்’ `கலியுகக் குற்றங்கள்’ `நெறியைத் தொடாத நியாயங்கள்’ இவை அனைத்தும் ஒரு ரூபாய் விலையில் மலிவுப்பதிக்காக வெளிவந்தன.
1986 கவிதைத்தொகுப்பு `தெற்கே ஓர் இமயம்’
1990 நாவல் `உறங்கமறந்த கும்பகர்ணர்கள்’ - 1990’ல் வெளிவந்த சிறந்த நாவல்களுள் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது - சுபமங்களா இதழ்.
1991 சிறுகதைத்தொகுதி `மண் உருவங்கள்’ - பாரத ஸ்டேட் வங்கியும் தமிழ்நாடு எழுத்தாளர் வாரியமும் இணைந்து வழங்கிய விருது.
1992 நாவல் `ஒரே ஒரு ஊர்ல’ - உலகளாவிய உன்னத மானிட நேய சேவை மையம் வழங்கிய விருது. (சென்னை)
1993 சிறுகதைத்தொகுதி `வண்டல்’

1. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - என்.சி.பி.எச் நிறுவனமும் இணைந்து வழங்கிய பாரதி நினைவு விருது. 2. கோவை லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை -` ஈ.எஸ்.டி’ நினைவு இலக்கிய விருது

1993 குறுநாவல் தொகுதி `மனசு’ - நான்கு குறுநாவல்கள் அடங்கியது. பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது.
1995 சிறுகதைத் தொகுதி `ஓராண்காணி’ - திருப்பூர் தமிழ்ச்சங்க விருது.
1996 சிறுகதைத் தொகுதி `ஒரு ஊரும் சில மனிதர்களும்’ -பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது.
1998 நாவல் `நஞ்சை மனிதர்கள்’ திருப்பூர் தமிழ்ச்சங்க விருது.
1999 நாவல் `செந்நெல்’ (2010 இல் பத்தாம் பதிப்பு)

1. தமிழக அரசின் பரிசு.
2. தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் வழங்கிய பாரதி விருது.
3. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கிய பெருமாயி - குப்பண்ணன் நினைவு நாவலுக்கான விருது.
4. பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது.

2000 சிறுகதைத் தொகுதி `வட்டத்தை மீறி’
2002 நாவல் `தப்பாட்டம்’ - பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது.
2005 நாவல் ‘பெருந்திணை’ தஞ்சை ப்ரகாஷ் - நினைவு இலக்கிய விருது. நினைவு இலக்கிய விருது.
2006 சிறுகதைத் தொகுதி `மடையான்களும் சில காடைகளும்’
2006 குறுநாவல் தொகுதி `குருமார்கள்’
2007 நாவல் `மரக்கால்’ கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை வழங்கிய நாவலுக்கான விருது.
2010 சிறுகதைத் தொகுதி `வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும்’
2010 கட்டுரை `தமிழ்மண்ணில் திருமணம்’
2011 கட்டுரைத் தொகுப்பு `மருதநிலமும் சில பட்டாம் பூச்சிகளும்’
2011 நாவல் `தாண்டவபுரம்’
2012 நாவல் `பால்கட்டு’
2012 சிறுகதைத் தொகுதி `கப்பல்காரர் வீடு’
2014 நாவல் ‘எல்லை பிடாரி’ ( பதிப்பில்)

‘வண்டல் உணவுகள்’ (பதிப்பில்)

விருதுகளும் - பதிவுகளும்

  1. 2008 தஞ்சாவூர் ராமசாமி - மாரியம்மாள் கல்வி அறக்கட்டளை வழங்கிய ஒட்டு மொத்த படைப்பு சாதனைகளுக்கான விருது.
  2. 2008 நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம் நடத்தும் புத்தகக்கண்காட்சியில் வழங்கப்பட்ட சிறந்த நாவலாசிரியருக்கான விருது.
  3. 2007 `தஞ்சை ஈன்ற தங்கங்கள்’ என்று சிறப்பித்து தினமணி நாளேட்டின் பொன்விழா மலரில் வெளியீடு செய்திருந்தது. அம்மலரில் மண்டலவாரியாக ஒவ்வொரு துறையிலும் சாதனைப்படைத்தவர்களைத் தேர்வு செய்திருந்தனர். தஞ்சை மண்டலத்தில் பிறந்து வளர்ந்தவர்களான கணிதமேதை ராமானுஜம் தொடங்கி கலைஞர் மு.கருணாநிதி, செம்பங்குடி சீனிவாசய்யர், உ.வே. சாமினாதய்யர் போன்றோர் வரிசையில் சோலை சுந்தரபெருமாளையும் இடம் பெற்றச் செய்திருந்தனர்.
  4. தமிழில் வந்துள்ள சிறந்த பத்து நாவல்கள் தேர்வில் மாயூரம் வேதநாயகம்பிள்ளையின் `பிரதாப முதலியார் சரித்திரம்’ தொடங்கி `செந்நெல்’ வரை இடம் பெற்று இருந்தன. இந்த சிறந்த நாவல்களைத் தேர்வு செய்தவர் விமர்சகர் வெங்கட்சாமினாதன். வெளியீடு குமுதம் தீபாவளி மலர் 2006.
  5. தமிழில் வெளிவந்துள்ள சிறந்த பத்து நாவல்கள் தொ.மு.சி.ரகுநாதனின் `பஞ்சும் பசியும்’ தொடங்கி `செந்நெல்’ வரை இடம்பெறச் செய்தவர் ஆய்வாளர் தி.க.சிவசங்கரன். வெளியீடு 2006 `செம்மலர் பொங்கல் மலர்’
  6. `மண்ணாசை’ சிறுகதையை தமிழ்நாடு பாடநுhல் நிறுவனம் பத்தாம் வகுப்பு துணைப்பாட நுhலில் 1999-- 2012 வரை இடம் பெறச் செய்திருந்தது. `ராஜாஜி தொடங்கி சோலைசுந்தரபெருமாள் வரை’ பத்து சிறுகதை ஆசிரியர்களின் சிறுகதைகளை உள்ளடக்கிய நுhலாக வெளிவந்தது.
  7. `செந்நெல்’ நாவல், 2000 ஆண்டு தொடங்கி பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மனோன்மணிசுந்தரம்பிள்ளை பல்கலைக்கழகம் போன்ற தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், தன்னாட்சிக்கல்லுரிகளிலும் இளங்கலை முதுகலை வகுப்புகளின் பாடத்திட்டத்தில் இடம் பெற்று இருந்தது. இன்றும் சிலவிடங்களில் தொடர்கின்றன.
  8. பத்துக்கு மேற்பட்டப் பல்கலைக் கழகங்களில் ஒட்டு மொத்தப் படைப்புகளிலும், தொகுத்தும், பிரித்தும் நுhற்றுக்கு மேற்பட்டவர்கள் ஆய்வை மேற்கொண்டனர்.

மொழிபெயர்ப்பு

  1. "செந்நெல்’’ நாவல், எல்.பி.சாமி அவர்களால் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  2. இதே "செந்நெல்’’ நாவல், முனைவர் தாமஸ் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த மொழிபெயர்ப்புக்கு மேலாய்வு ஆசிரியராகப் பணியாற்றியவர் பிரபல மொழிபெயர்ப்பாளர் லதா ராமகிருஷ்ணன் அவர்கள்.

வெளி இணைப்பு

மேற்கோள்கள்

  1. https://www.dinamani.com/tamilnadu/2021/jan/12/solai-sundara-perumal-passed-away-3542791.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-01-14. பார்க்கப்பட்ட நாள் 2021-01-12.
"https://tamilar.wiki/index.php?title=சோலை_சுந்தரபெருமாள்&oldid=4306" இருந்து மீள்விக்கப்பட்டது