சோம. இளவரசு
Jump to navigation
Jump to search
சோம. இளவரசு
இயற்பெயர் | புலவர் சோம. இளவரசர் |
---|---|
பிறந்ததிகதி | 25 திசம்பர் 1934 |
பிறந்தஇடம் | கீழச்சீவல்பட்டி, தமிழ்நாடு |
இறப்பு | 31 மே 1986 | (அகவை 51)
பணி | பேராசிரியர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி நிலையம் | அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |
சோம. இளவரசு (டிசம்பர் 25, 1934 - மே 31, 1986) என்பவர் நன்னூலுக்கு உரையெழுதிய தமிழ்ப் பேராசிரியராவார். மேலும் மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், நூலாசிரியர், உரையாசிரியராகவும் திகழ்ந்தார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
சோமசுந்தரம் செட்டியார், கல்யாணி ஆச்சி தம்பதியினரின் மூத்த மகனாகக் கீழச்சீவல்பட்டி சூரக்குடியில் 1934 ஆம் ஆண்டு பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். முதுகலைத் தமிழ்ப் பட்டம் பெற்றார். 1957-58 அரசர் அண்ணாமலை விருதினைப் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 28 ஆண்டுகள் தமிழ்த் துறையில் பணியாற்றினார். இவர் 1963ஆம் ஆண்டு எழுதிய இலக்கண வரலாறு நூல் உட்பட இவரது நூல்கள் பல்வேறு கல்லூரிகளில் பாடத்திட்டமாக உள்ளன.[2][3][4]
எழுதிய நூல்கள்
- இலக்கண வரலாறு
- இலக்கிய வரலாறு
- திருவருணைக் கலம்பகம்
- 20 நூற்றாண்டுகளில் தமிழ்
- காப்பியத் திறன்
- பரணி இலக்கியம்
- நீதி சூடி
- நன்னூல் உரை- எழுத்ததிகாரம்
- நன்னூல் உரை - சொல்லதிகாரம்
மேற்கோள்கள்
- ↑ நகரத்தார் கலைக்களஞ்சியம் (2002 ). மெய்யப்பன் தமிழாய்வகம். பக். 70.
- ↑ "இலக்கிய வரலாறு". https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt0lZU7#book1/. பார்த்த நாள்: 20 October 2023.
- ↑ "இளங்கலைப் பாடத்திட்டம்". https://gacsalem7.ac.in/wp-content/uploads/2021/11/BA-Tamil-2017-onwards.pdf. பார்த்த நாள்: 20 October 2023.
- ↑ "முதுகலைப் பாடத்திட்டம்". https://www.periyaruniversity.ac.in/Documents/2021/syllabus/2021/Affiliated/pg1/M.A%20TAMIL.pdf. பார்த்த நாள்: 20 October 2023.