சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் சங்ககாலப் புலவர். இவரது பாடல்கள் இரண்டு உள்ளன. அவை புறநானூறு 181, 265 அகியவை.

பாடல் சொல்லும் செய்திகள்

வல்லார் கிழான் பண்ணன்

புலவர் பாணனை இந்த வல்லார் கிழான் பண்ணனிடம் ஆற்றுப்படுத்துகிறார். அவன் போருக்குப் புறப்படுவதற்கு முன் அவனிடம் சென்று பாணனின் பசிப்பகையை முற்றிலுமாகத் தீர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்.
புறநானூறு 181

(சேரன் ஒருவனின்) கையறுநிலை

போர்ப்பறந்தலையில் மாண்ட ஒருவனுக்கு அனிரை மேய்க்கும் கோவலர் வேங்கைப் பூவையும், பனந்தோட்டையும் சேர்த்து மாலையாகக் கட்டி அணிவித்தார்களாம். பனந்தோட்டு மாலை பெற்றதால் இவன் சேரன் எனத் தெரிகிறது.

இவன் கடுமான் தோன்றல் தோன்றல் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான். இதனால் இவன் சிறந்த போர்வீரன் எனத் தெரிகிறது.

இவன் செல்வம் இவனுடையது அன்றாம். இவனால் போற்றிப் பாதுகாக்கப்பட்ட பரிசிலர்களுக்கு உரியதாம்.

இவன் மாண்டபோது யானைமீது செல்லும் வேந்தர்களின் வெற்றியும் மாண்டுபோயிற்றாம். இப்படிக் கூறப்படுவதால் இவன் வேந்தர்களுக்காகப் போரிட்டு மடிந்தான் எனத் தெரிகிறது.
புறநானூறு 265