சோடியைட்டு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சோடியைட்டு
Soddyite
காங்கோ மக்களாட்சிக் குடியரசின் சுவாம்போவிலிருந்து கிடைத்த மஞ்சள் நிற சோடியைட்டு படிகங்களைக் கொண்ட ஒரு பாறைத் துண்டு.
பொதுவானாவை
வகைநெசோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடு(UO2)2SiO4·2H2O
இனங்காணல்
நிறம்வைக்கோல் மஞ்சள் முதல் மஞ்சள்
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
பிளப்பு{001} இல் சரிபிளவு, தெளிவு {111}
மிளிர்வுபளபளக்கும், மங்கலாகவும் இருக்கும்
கீற்றுவண்ணம்மஞ்சள்
ஒளிஊடுருவும் தன்மைஒளி புகும் , ஒளி கசியும், ஒளிபுகாது
அடர்த்தி4.627
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.650 - 1.654, nβ = 1.685, nγ = 1.699 - 1.715
இரட்டை ஒளிவிலகல்0.049 - 0.061
நிறப்பிரிகைபலவீனமானது
புறவூதா ஒளிர்தல்மெல்லிய ஆரஞ்சு மஞ்சள்
பிற சிறப்பியல்புகள் கதிரியக்கப் பண்பு கொண்டது

சோடியைட்டு (Soddyite) என்பது (UO2)2SiO4•2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சோடியைட்டு யுரேனியத்தின் ஒரு கனிமமாகும். இது மஞ்சள் நிற படிகங்களைக் கொண்டுள்ளது. பொதுவாக ஆக்சிசனேற்றப்பட்ட யுரேனியம் தாதுக்களில் கியூரைட்டுடன் கலக்கப்படுகிறது. பிரிட்டிசு கதிரியக்க வேதியியலாளர் மற்றும் இயற்பியலாளர் பிரடெரிக் சோடியின் (1877–1956) நினைவாக இக்கனிமத்திற்கு சோடியைட்டு எனப் பெயரிடப்பட்டது

பன்னாட்டு கனிமவியல் சங்கம் சோடியைட்டு கனிமத்தை Sod[1]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

காங்கோ சனநாயகக் குடியரசின் ஆட்-கட்டங்கா மாகாணத்தில் உள்ள சின்கோலோப்வே யுரேனியம் சுரங்கத்தின் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1922 முதல் சோடைட்டு ஒரு செல்லுபடியாகும் இனமாக இருந்து வருகிறது.[2][3][4]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சோடியைட்டு&oldid=373875" இலிருந்து மீள்விக்கப்பட்டது