சொ. நாகப்பன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நீதியரசர்
சொ. நாகப்பன்
உச்ச நீதிமன்ற நீதிபதி
பதவியில் உள்ளார்
பதவியில்
19 செப்டம்பர் 2013
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 அக்டோபர் 1951 (1951-10-04) (அகவை 73)
கரூர், தமிழ்நாடு
தேசியம்இந்தியர்

சொ. நாகப்பன் (C. Nagappan, அக்டோபர் 4, 1951) இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார்.[1]. இவர் தமிழ்நாட்டின் கரூரைச் சேர்ந்தவர்.

கல்வி

இவர் தம் புகுமுக வகுப்புப் படிப்பைத் திருச்சிராப்பள்ளி தூய சூசையப்பர் கல்லூரியிலும், இளம் அறிவியல் கல்வியை மதுரை மதுரா கல்லூரியிலும் பயின்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டப் படிப்பின் தேர்வில் மூன்றாவது இடம் பெற்று வெற்றி அடைந்தார். குற்றவியல் சட்டத்தில் முது நிலை சட்ட தேர்வில் தங்கப் பதக்கம் பெற்று தேர்ச்சிப் பெற்றார்.

சட்டப் பணி

அட்டர்னி ஜெனரலாக இருந்த பராசரனின் கீழ் இளையராக இருந்து வழக்கறிஞர்ப் பணியை ஆற்றினார். சட்டக் கல்லூரியில் பகுதி நேரப் பேராசிரியராகவும் இருந்தார். உயர்நீதி மன்ற கண்காணிப்புத் துறையிலும் பணி செய்தார். கடலூர், சேலம், கோவை ஆகிய நகரங்களில் செசன்சு நீதிபதியாகப் பணி புரிந்தார். 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ல் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனார். பின்னர் 2013ஆம் ஆண்டு பிப்பிரவரி 27-ல் ஒரிசா உயர்நீதி மன்ற முதன்மை நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். சில மாதங்கள் கழித்து 2013 செப்டம்பர் 19 முதல் இந்திய உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். நீதிபதி நாகப்பன் இப்பதவியில் 2016 அக்டோபர் மாதம் வரை பணியாற்றினார்.[2]

மேற்கோள்கள்

  1. "Orissa HC judge elevated to Supreme Court". Zee News. 16 September 2013. http://zeenews.india.com/news/odisha/orissa-hc-judge-elevated-to-supreme-court_876994.html. பார்த்த நாள்: 5 January 2014. 
  2. "Hon'ble Mr. Justice Chockalingam Nagappan (DoB 04.10.1951)". Supreme Court of India. பார்க்கப்பட்ட நாள் 8 பெப்ரவரி 2016.

சான்றுகள்

"https://tamilar.wiki/index.php?title=சொ._நாகப்பன்&oldid=28010" இருந்து மீள்விக்கப்பட்டது