சையிது ஹுசைன் மௌலானா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சையிது ஹுசைன் மௌலானா
S H Moulana Kalai.JPG
இயற்பெயர் சையிது ஹுசைன் மௌலானா
பிறப்பு ஹுசைன் மௌலானா
இறப்பு மார்ச்சு 16, 2016(2016-03-16) (அகவை 64)
பணி முகாமையாளர், முஸ்லிம் கல்வி நிறுவனம், கொழும்பு

சையிது ஹுசைன் மௌலானா (S Hussain Moulana, இறப்பு: 2016 மார்ச்சு 16) இலங்கை வெலிகமை யைப் பிறப்பிடமாகக் கொண்ட பன்முக ஆற்றல் கொண்ட எழுத்தாளரும், கவிஞரும், ஆய்வாளரும் ஆவார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் மற்றும் ஏனைய பல மொழிகளில் ஆற்றல் மிக்கவர்.

வெலிகம கல்வி ஸ்தாபனம், வெலிகம முஸ்லிம் கல்வி ஸ்தாபனம் எனும் பெயர்களில் கல்விச் சகாய நிலையங்களை நிறுவி, அவற்றின் மூலம் பன்னூறு மக்களுக்கு உதவி செய்தவர். தமிழ் ஆக்க இலக்கியங்களை மாணாக்கர் மத்தியில் பரவச் செய்ய ஈழத்துப் பிரபல எழுத்தாளர்கள், கவிஞர்களைக் கொண்டு பல கருத்தரங்குகளை நடாத்தியவர்.

இலங்கையில் திறமை வாய்ந்த எழுத்தாளர்களை இனங்கண்டு, அவர்களது நூல்களை அச்சேற்றிக் கொடுத்துள்ளார். இவர் ஒரு வணிகரும் ஆவார். இவர் இலங்கை எழுத்தாளர்களின் புத்தகங்களை நூற்றுக் கணக்கில் விலை கொடுத்து வாங்கி அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வந்தார்.[1]

எழுதிய நூல்கள்

  • மேற்கு மனிதன்[2] (நெடுங்கவிதை நூல்)
  • கருத்துச் சுதந்திரம்
  • கருத்துக் கண்ணோட்டம் - 1
  • கருத்துக் கண்ணோட்டம் - 2
  • கருத்துக் கண்ணோட்டம் - 3
  • கருத்துக் கண்ணோட்டம் - 4
  • அறியப்படாத அரேபியா
  • நாம் இனிச் செய்ய வேண்டியது என்ன?
  • இஸ்லாமிய உலகும் சவால்களும் ISBN 955-1430-00-X
  • ஆன்மீகப் பகை தார்மீகமானதா?[3]
  • காலம் பேசுகிறது...!

இறப்பு

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆந் திகதி தெகிவளை கவ்டான வீதியிலுள்ள அவரது வீட்டில், கையடக்கத் தொலைபேசி வெடித்ததனால் அதிலிருந்து வந்த நச்சுப் புகை அவரது உடலிற்குச் சென்று அவர் இறந்தார். அவருடன் சேர்த்து அவரது மனைவி, மகள், உறவுக்காரப் பெண் ஆகியோரும் இறந்துள்ளனர்.[4][5]

உசாத்துணை

  1. மிலேனியம் கல்வி ஸ்தாபனத் தலைவர் எஸ். எச். மௌலானா நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்களும் கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்
  2. மேற்கு மனிதன் (நெடுங்கவிதை நூல்)
  3. (ஆன்மீகப் பகை தார்மீகமானதா?)[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "தினகரன் செய்தி". Archived from the original on 2016-03-20. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
  5. வீரகேசரிச் செய்தி
"https://tamilar.wiki/index.php?title=சையிது_ஹுசைன்_மௌலானா&oldid=15320" இருந்து மீள்விக்கப்பட்டது