சையது முகைதீன் கவிராசர்
Jump to navigation
Jump to search
சையது முகைதீன் கவிராசர் நறுமணப் பொருட்களை விற்பனை செய்யும் நாஞ்சில் நாட்டின் கோட்டாற்று இசுலாமியக் குடும்பத்தில் தோன்றியவர். சேரநாட்டு மன்னன் அவையில் பெரும் புலவராகத் திகழ்ந்தார். சேரனோடு ஏற்பட்ட பிணக்கால் பாண்டிய நாடு சென்றார். அரசனுக்கு தன் பெருமைகளை எடுத்துக் கூறி மன்னனது மதிப்பிற்குள்ளாகிப் பரிகள் பல பெற்றார். பின்னர் மேலப்பாளையத்தில் தங்கி பாக்கள் புனைந்துள்ளார்.
படைப்புகள்
- முகைதீன் ஆண்டவர் திருப்புகழ்
- முகைதீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ்
- மாணிக்கமாலை
உசாத்துணை
- தமிழிலக்கிய வரலாறு. ஜனகா பதிப்பகம் . 1997