சேலியமேடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சேலியமேடு
Seliamedu

கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்பாண்டிச்சேரி
வட்டம் (தாலுகா)பாகூர்
ஒன்றியம்பாகூர்
மொழிகள்
 • அலுவல்பூர்வம்பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அ.கு.எண் -->
607 402
தொலைபேசிக் குறியீடு0413
வாகனப் பதிவுPY-01
பாலின விகிதம்50% /

சேலியமேடு (Seliamedu) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள பாகூர் தாலுக்காவில் இருக்கும் பாகூர் ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம்[1] ஆகும். புதுச்சேரி மாவட்டத்தின் அயலகச் சிற்றூரான பாகூருக்கு வடக்கில் இக்கிராமம் அமைந்துள்ளது.

எல்லைகள்

மேற்கில் பாகூர் கிராமம், வடக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கீழ்குமாரமங்கலம் கிராமம், கிழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாகப்பனூர், தெற்கில் குடியிருப்புபாளையம் மணப்பட்டு ஆகியன சேலியமேடு கிராமத்திற்கு புவியியல் எல்லைகளாக அமைந்துள்ளன.

சாலைப் போக்குவரத்து

வில்லியனூர் – பாகூர் சாலையில் சேலியமேடு கிராமம் அமைந்துள்ளது. மேலும் திம்மநாயக்கன்பாளையம் – பாகூர் சாலையுடனும் இக்கிராமம் இணைக்கப்பட்டுள்ளது.

கிராமங்கள்

சேலியமேடு கிராமப் பஞ்சாயத்தில் பின்வரும் கிராமங்கள் இடம்பெற்றுள்ளன.

  • சேலியமேடு
  • அரங்கனூர்

அரசியல்

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டும், ஏம்பலம் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் சேலியமேடு கிராமம் இருக்கிறது

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. Retrieved 2016-03-26.

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சேலியமேடு&oldid=372680" இலிருந்து மீள்விக்கப்பட்டது