சேரன்(கவிஞர்)
Jump to navigation
Jump to search
உ. சேரன் | |
---|---|
முழுப்பெயர் | உருத்திரமூர்த்தி |
சேரன் | |
பிறந்த இடம் | அளவெட்டி, |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | உருத்திரமூர்த்தி |
பத்மாசனி |
உருத்திரமூர்த்தி சேரன் யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்த ஈழத்தின் குறிப்பிடத்தகுந்த கவிஞர்களில் ஒருவர். ஈழத்தின் நவீன கவிதையின் முதல்வரான மஹாகவியின் மகன். 1972இல் இவரது முதலாவது கவிதை பிரசுரமாகியது. எனினும் 70களின் பிற்பகுதியில்தான் தீவிரமாக எழுதத் தொடங்கினார். கவியரசன் என்ற பெயரிலும் கவிதைகள் எழுதியுள்ளர். சிறுகதைகளும் எழுதிவரும் இவர், இலக்கிய விமர்சன ஈடுபாடும் உள்ளவர். ஓவியத்துறையிலும் ஆர்வமுடையவர். பலருடைய நூல்கள் இவரது அட்டை ஓவியத்துடன் வெளிவந்துள்ளன.
இவரது கவிதைகள் சிங்களம், ஆங்கிலம், ஜேர்மன், டச்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கனடா, யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். கனடாவின் வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல், மானுடவியல்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[1]
இவரது நூல்கள்
- இரண்டாவது சூரிய உதயம் (1983)
- யமன் (1984)
- கானல் வரி (1989)
- எலும்புக் கூடுகளின் ஊர்வலம் (1990)
- எரிந்து கொண்டிருக்கும் நேரம் (1993)
- நீ இப்பொழுது இறங்கும் ஆறு (2000)
- உயிர் கொல்லும் வார்த்தைகள்
- "மீண்டும் கடலுக்கு" (காலச்சுவடு பதிப்பகம்)
- "காடாற்று" (காலச்சுவடு பதிப்பகம்)
விருதுகள்
- ஓ.என்.வி. குருப்பு அவர்களின் நினைவாக வழங்கப்படும் ஓஎன்வி சர்வதேச இலக்கிய விருது (ONV International Literary Award), 2016[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Lankan poet bags first ONV award". Daily News. 07-02-2017. பார்க்கப்பட்ட நாள் 8-02-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)