சேத்துமான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சேத்துமான்
Seththumaan
இயக்கம்தமிழ்
தயாரிப்புபா. ரஞ்சித்
கதைபெருமாள் முருகன்
இசைபிரதீப் காளிராசா
நடிப்பு
  • மாணிக்கம்
  • அசுவின்
  • பிரசன்ன பாலச்சந்திரன்
  • சாவித்திரி
ஒளிப்பதிவுபிந்து மாலினி
படத்தொகுப்புசி. எசு. பிரேம்குமார்
கலையகம்பா. ரஞ்சித்
விநியோகம்சோனிலைவு
வெளியீடுமே 27, 2022 (2022-05-27)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சேத்துமான் (Seththumaan) 2022 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்திய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். தமிழ் என்ற அறிமுக இயக்குநரால் எழுதி இயக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி என்ற சிறுகதையின் முழுநீள திரைப்பட வடிவமே சேத்துமான் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் மாணிக்கம், அசுவின், பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் சாவித்திரி ஆகியோர் நடித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதியன்று திரைப்படம் வெளியிடப்பட்டது.[2][3]

நடிகர்கள்

பூச்சியாக மாணிக்கம்
குமரேசன் வேடத்தில் அசுவின் சிவா
வெள்ளையனாக பிரசன்னா பாலச்சந்திரன்
சாவித்திரி
ரங்கனாக அருள் குமார்

கதை

நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் கதை நிகழ்கிறது. தாத்தா பூச்சியப்பனின் அரவணைப்பில் வளர்கிறான் 10 வயது சிறுவன் குமரேசன். அவனை நன்கு படிக்கவைத்து ஆளாக்க விரும்புகிறார் ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்த பூச்சியப்பன். கூடை பின்னி விற்கும் அவர், ஊர் மிராசுவான வெள்ளையனுக்கு எடுபிடி வேலையும் செய்கிறார். சேத்துமான் பன்றிக் கறி சாப்பிட விரும்பும் மிராசு அதற்காக ஆள் சேர்க்கிறார். ஒரு பன்றியை வாங்கி, அதை கொன்று, அதன் மாமிசத்தை நண்பர்களுடன் பங்கு பிரித்துக்கொள்ள திட்டமிடுகிறார். அந்த நாளும் வருகிறது. பூச்சியப்பனும், பேரன் குமரேசனும் அந்த நாளை எப்படி எதிர்கொண்டனர் என்பது கதையாகும்.

தயாரிப்பு

சேத்துமான் திரைப்படம் தமிழ் என்பவரை இயக்குனராக அறிமுகப்படுதுகிறது. முன்னதாக இவர் பட்டாளம் (2009), பிரியாணி (2013) போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். பல திரைக்கதைகளை எழுதிய இயக்குநர் தமிழால் அவற்றை வெற்றிகரமாக திரைப்படங்களாக்க முடியவில்லை. ஒழிவுதிவசதே காளி (2015) என்ற மலையாளத் திரைப்படத்தைப் பார்த்த பின்னர் குறைந்த செலவிலும் திரைப்படங்களை உருவாக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டார்.[4] தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் சிறுகதையான வறுகறியை அடிப்படையாகக் கொண்டு சேத்துமானை உருவாக்கியுள்ளார். ஒரு தாத்தா மற்றும் அவரது பேரனின் உறவை திரைப்படம் பேசுகிறது. அதே நேரத்தில் சாதி மற்றும் இறைச்சியின் அரசியலையும் கூர்மையாகப் பார்க்கிறது.[5]

6 லட்சம் ரூபாய் செலவில் படத்தைத் தயாரித்து முடித்துவிடலாம் என்று தமிழ் திரைப்படத்தை தொடங்கினார். ஆனால் இப்பணத்தால் புகைப்படக் கருவி போன்ற உபகரணங்களின் வாடகைச் செலவைக் கூட சமாளிக்க முடியவில்லை. நிதி உதவிக்காக இயக்குநர் பா.ரஞ்சித்தை அணுகினார். அவரும் திரைப்படத்தை தயாரிக்க உதவினார்.[6]

சேத்துமான் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, கேரளாவின் பன்னாட்டுத் திரைப்பட விழா மற்றும் சென்னை பன்னாட்டுத் திரைப்பட விழா உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது.[7][8]

விமர்சனங்கள்

சோனிலைவ் நிறுவனம் சேத்துமான் திரைப்படத்தை 27 மே 2022 அன்று வெளியிட்டது.[9] புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட உரையாடல்கள் சேத்துமானின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும் என தி நியூ இந்தியன் எக்சுபிரசு செய்தித்தாள் திரைப்படத்திற்கு ஒரு நேர்மறையான மதிப்பாய்வை வழங்கியது.[10] உணவு மற்றும் அரசியலைச் சார்ந்த ஒரு திரைப்படத்தில் தமிழ் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார் எனவும் உணவு அரசியலில் ஒரு கடினமான படம் சேத்துமான் என்றும் பத்திரிகைகள் சேத்துமான் திரைப்படம் பற்றி குறிப்பிட்டுள்ளன.[11][12]

மேற்கோள்கள்

  1. "திரை விமர்சனம்: சேத்துமான்" (in ta). https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/807483-movie-review.html. 
  2. "Thamizh on choosing Perumal Murugan’s short story for his directorial Seththumaan: 'Wanted to make an impactful film'". Firstpost.com. 2022-05-31 இம் மூலத்தில் இருந்து 2022-06-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220604215030/https://www.firstpost.com/entertainment/thamizh-on-choosing-perumal-murugans-short-story-for-his-directorial-seththumaan-wanted-to-make-an-impactful-film-10741231.html. 
  3. "Pa Ranjith and Thamizh's film 'Seththumaan' to skip theatrical release | Tamil Movie News". Timesofindia.indiatimes.com. 2022-05-12 இம் மூலத்தில் இருந்து 2022-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220513191437/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/pa-ranjith-and-tamizhs-film-seththumaan-to-skip-theatrical-release/articleshow/91513531.cms. 
  4. Menon, Akhila R (2022-05-29). "EXCLUSIVE: Seththumaan Director Thamizh: The Real Magic Happens When The Audiences Watch The Film!". Filmibeat இம் மூலத்தில் இருந்து 2022-06-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220604215045/https://www.filmibeat.com/tamil/news/2022/exclusive-seththumaan-director-thamizh-the-real-magic-happens-when-the-audiences-watch-the-film-335332.html?story=4. 
  5. "Seththumaan director Thamizh interview" இம் மூலத்தில் இருந்து 2022-06-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220604215046/https://www.pinkvilla.com/entertainment/south/exclusive-seththumaan-director-thamizh-says-perumal-murugans-short-story-was-haunting-him-long-time-1135278. 
  6. "Director Thamizh on seeking Pa Ranjith’s help for ‘Seththumaan’" இம் மூலத்தில் இருந்து 2022-05-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220531053630/https://www.thehindu.com/entertainment/movies/thamizh-on-seththumaan/article65459330.ece. 
  7. "Review: Tamizh's 'Seththumaan' Perfectly Captures the Politics Around Food And Caste" இம் மூலத்தில் இருந்து 2022-05-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220528091742/https://www.thequint.com/entertainment/movie-reviews/seththumaan-review-perumal-murugan-story-tamizh-pa-ranjith#read-more. 
  8. kavitha (2022-05-30). "Tamil OTT film 'Seththumaan' weaves a touching tale around pork politics in Kongu region". The Federal இம் மூலத்தில் இருந்து 2022-05-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220530010250/https://thefederal.com/entertainment/tamil-ott-film-seththumaan-weaves-a-touching-tale-around-pork-politics-in-kongu-region/. 
  9. "Seththumaan to release exclusively on SonyLiv on this date" இம் மூலத்தில் இருந்து 2022-05-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220516013828/https://www.cinemaexpress.com/tamil/news/2022/may/11/seththumaan-to-release-exclusively-on-sonyliv-on-this-date-31422.html. 
  10. "Movie Review| Seththumaan: The first sounds of an important voice" இம் மூலத்தில் இருந்து 2022-06-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220604215042/https://www.newindianexpress.com/entertainment/review/2022/may/28/movie-review-seththumaan-the-first-sounds-of-animportant-voice-2458784.html. 
  11. "'Seththumaan' review: A hard-hitting take on food politics" இம் மூலத்தில் இருந்து 2022-06-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220604215038/https://www.deccanherald.com/entertainment/entertainment-news/seththumaan-review-a-hard-hitting-take-on-food-politics-1114569.html. 
  12. "Seththumaan movie review: Tamizh makes an impressive directorial debut on a film around food and politics". Firstpost.com. 2022-05-27 இம் மூலத்தில் இருந்து 2022-05-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220527153802/https://www.firstpost.com/entertainment/seththumaan-movie-review-tamizh-makes-an-impressive-directorial-debut-on-a-film-around-food-and-politics-10725021.html. 
"https://tamilar.wiki/index.php?title=சேத்துமான்&oldid=32900" இருந்து மீள்விக்கப்பட்டது