சேசன் பெரியசாமி
சேசன் பெரியசாமி (Jessen Periasamy, ஜேசன் பெரியசாமி; பிறப்பு: மே 9, 1988), மொரிசியசைச் சேர்ந்த தமிழ் இசைக்கலைஞர் ஆவார். பத்துக்கும் அதிகமான இசைக் கோவைகளை வெளியிட்ட ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.[சான்று தேவை]
வாழ்க்கைக் குறிப்பு
1988 மே 9 இல் பிறந்த ஜேசன் பெரியசாமி இளமையிலேயே மேல்நாட்டுச் செந்நெறி இசையில் ஈர்க்கப்பட்டார். ஆர்கன், புல்லாங்குழல், கிளாரினெட் ஆகிய இசைக்கருவிகளில் இசைக்கப் பழகினார். இசைப் பயிற்சி வகுப்புகளுக்கும் சென்று தனது திறமையை மேம்படுத்திக் கொண்டார்.
மொரிசிய வானொலி, உள்ளூர் கூடலகங்கள், கல்லூரி களியாட்ட விழாக்கள் போன்றவற்றில் பாடினார். இதன் மூலம் அவருக்கு மொரிசியசில் பிரபலமான இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
ஆத்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்த ஜேசன் மெல்பேர்ண் நகரில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஃபொக்சு எஃப்எம் வானொலி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றினார்.