செழியன் (ஒளிப்பதிவாளர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இயக்குநர் ஒளிப்பதிவாளர் செழியன்

செழியன் (Chezhiyan) தமிழ்த் திரைப்படத்துறையில் முன்னணி ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் கட்டுமானத் துறைப் பொறியியல் படிப்பை முடித்தபின் பி. சி. சிறீராமிடம் ஒளிப்பதிவாளராக தன் பணியைத் தொடங்கினார். இவர் தமிழ்நாட்டின் சிவகங்கையில் பிறந்தவர். கல்லூரி என்ற திரைப்படத்தின் அறிமுகமாகி, இயக்குநர் பாலாவின் பரதேசி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகி, அப்படத்தின் ஒளிப்பதிவுக்காக 2013 இல் இலண்டன் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினைப் பெற்றார்.

இவர் உலக சினிமா குறித்த நிகழ்வுகளைத் தொடராக 2005 முதல் 2007 வரை ஆனந்தவிகடனில் எழுதினார். இத்தொடர் ”உலக சினிமா” என்ற நூலாக வெளிவந்தது. கார்மோனியம் (2004) என்ற சிறுகதைக்காக கதா விருதினைப் பெற்றார். ”தமிழ்ச் சிறுகதைகளில் உளக்காட்சிகள்” (2004-2006) என்ற ஆய்வுக்காக இந்தியு அரசின் கலாச்சாரத் துறையின் விருது பெற்றுள்ளார். முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், எழுத்தாளர் செயகாந்தன் ஆகியோர் பற்றிய ஆவணப் படங்களைத் தயாரித்துள்ளார். இசைப்பள்ளி ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியாக தெற்கத்திய இசையைக் கற்றுக்கொள்ள நூல்களை வெளியிட்டுள்ளார். தெற்கத்திய இசை, பேசும் படம், முகங்களின் திரைப்படம் ஆகிய பத்து தொகுதி நூல்களை வெளியிட்டுள்ளார். 2012இல் நார்வே தமிழ் சினிமா திருவிழாவில் ”கள்ளத் தோணி” குறும்படத்திற்கான சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினைப் பெற்றார்[1][2]. இவர் இயக்கிய டூலெட் தமிழ்த் திரைப்படம் 2018 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றது.[3]

திரைப்படத்துறை

குறும்படங்கள், ஆவணப்படங்கள்

  • திருவிழா (2002)
  • எல்லைகள் விசாரித்த எழுத்துக் கவிஞன் (2011)

மேற்கோள்கள்

  1. "NTFF 2012 short film award list has been released". NTFF இம் மூலத்தில் இருந்து 2013-02-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130220021514/http://www.ntff.no/News/69.  Retrieved 2016-10-3
  2. Subramanian, Anupama (21 October 2013). "Big honour for Bala’s Paradesi". தி டெக்கன் குரோனிக்கள் இம் மூலத்தில் இருந்து 2 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140102194223/http://www.deccanchronicle.com/131021/entertainment-kollywood/article/big-honour-bala%E2%80%99s-paradesi. பார்த்த நாள்: 2 January 2014. 
  3. "65-வது தேசிய திரைப்பட விருதுகள்: 'டு லெட்' சிறந்த தமிழ்ப் படம் ; ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 விருதுகள்". தினமணி. http://www.dinamani.com/cinema/cinema-news/2018/apr/14/65-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%8F%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2899713.html. , ஏப்ரல் 14, 2018
"https://tamilar.wiki/index.php?title=செழியன்_(ஒளிப்பதிவாளர்)&oldid=21346" இருந்து மீள்விக்கப்பட்டது