செல்வம் பெர்னாண்டோ

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

செல்வம் பெர்னாண்டோ இலங்கையில் புகழ்பெற்ற ஒரு நாடக, திரைப்பட நடிகை.

வாழ்க்கைச் சுருக்கம்

தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு என்ற கிராமத்தில் ஜோன் பெர்னாண்டோ, ராணி பெர்னாண்டோ ஆகியோருக்கு மூத்தவராகப் பிறந்தார். இவருக்கு எட்டு சகோதர சகோதரிகள். ஒரு வயதாக இருக்கும் போதே குடும்பத்துடன் இலங்கைக்கு இடம்பெயர்ந்து வந்து விட்டார். கொழும்பு கொட்டாஞ்சேனை கதிரேசன் வீதியில் வளர்ந்த செல்வம் கொட்டாஞ்சேனை நல்லாயன் பாடசாலையில் கல்வி கற்றார். இவரது கணவர் காலஞ்சென்ற ராஜேந்திரன் பெர்னாண்டோ. பிரதீப்குமார் என்ற மகன் உள்ளார்.

நாடகங்களில் அறிமுகம்

இலங்கை வானொலியில் முதன் முதலில் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்குபற்றினார். பின்னர் சி. சண்முகம், லடீஸ் வீரமணி, ஜே.பி. ரொபர்ட் உள்ளிட்ட பலரின் நாடகங்களில் நடித்தார். இவர் நடித்த நாடகங்களில் சுமதி, புரோக்கர் கந்தையா போன்றவை அதிக தடவை மேடையேறியவை. இது தவிர தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.

திரைப்படங்களில்

இலங்கையில் தயாரான முதல் திரைப்படமான தோட்டக்காரி திரைப்படத்தில் கதாநாயகிக்காக குரல் கொடுத்தார். இவர் நடித்த முதல் படம் புதிய காற்று. இது தவிர தென்றலும் புயலும் படத்தில் நடித்தமைக்காக ஜனாதிபதி விருது கிடைத்தது.

நடித்த திரைப்படங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=செல்வம்_பெர்னாண்டோ&oldid=15404" இருந்து மீள்விக்கப்பட்டது