செம்பியனார்
Jump to navigation
Jump to search
செம்பியனார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 102.
தலைவி தலைவனிடம் கிளியைத் தூது அனுப்புவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
- "செவ்வாய்ப் பைங்கிளியே! உன்னைக் கைகூப்பித் தொழுது இரந்து கேட்டுக்கொள்கிறேன். நீ என் தினையைக் கிள்ளி எடுத்துக்கொண்டாய். உன் உற்றார் உறவினர் இருக்கும் ஊருக்குச் செல்வாயல்லவா? அப்போது வழியில் பலா பழுத்திருக்கும் நாடனாகிய என்னவனைப் பார்த்து உன் காதலி, கானக் குறவன் மடமகள், தினைப்புனம் காத்துக்கொண்டிருக்கிறாள் என்று சொல்வாயாக!" என்கிறாள்.