செந்தலை ந. கவுதமன்
ந. கவுதமன் | |
---|---|
முழுப்பெயர் | செந்தலை ந. கவுதமன் |
பிறப்பு | 1953 |
பிறந்த இடம் | செந்தலை, |
தஞ்சாவூர் மாவட்டம், | |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | புலவர் |
வகை | கவிதை |
ந. கவுதமன் சம கால வரலாற்று ஆய்வாளர், பெரியாரிய, மார்க்சிய, தமிழ்த்தேசிய ஆர்வலர். பாவேந்தர் மீது பெரும் பற்று கொண்டவர். சனவரி மாதம் 1954 ல் பிறந்த. இவரின் சொந்த ஊர் தஞ்சையை சேர்ந்த செந்தலை ஆகும்.[1] பள்ளிப் படிப்பை சர் சிவசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளி (1965 - 1971), திருக்காட்டுப்பள்ளி, தஞ்சையில் முடித்தார். திருவையாறு அரசு கல்லூரியில் (1971 - 1975) தொடர்ந்து புலவர் படிப்பை முடித்து, தமிழாசிரியராக பூ.சா.கோ. சர்வ சன மேல்நிலைப்பள்ளியில் 1978 முதல் 2013 வரை பணி புரிந்தார். மேலும் இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பட்டம் பெற்றுள்ளார். வி.அ.அரங்கசாமி, தி.வே.கோபாலையர் இவரின் ஆசிரியர்கள். தற்போது பணி நிறைவுற்று கோவை மாவட்டம் சூலூர் என்ற ஊரில் வசிக்கிறார்.
தமிழறிவும், தமிழ் நாட்டின் அரசியல் சமூக வரலாற்று அறிவும் கொண்டவர். பல மேடைகளில் சுவைபடவும், வரலாற்று தகவல்களுடனும் பேசி வருபவர். சூலூர் பாவேந்தர் பேரவை என்ற பெயரில் சூலூரில் மன்றம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
சிறப்புகள்
- புலவர் தேர்வில் சென்னைப் பல்கலைக்கழக முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றவர்.
- தமிழக அரசின் "டாக்டர் இராதாகிருட்டிணன் (நல்லாசிரியர்) விருது " பெற்றவர் .
- கோவை பாரதியார் பல்கலைக்கழக "தமிழ்ச் சான்றோர் விருது " பெற்றவர் .
- இலக்கணக்கடல் தி.வே.கோபாலய்யரின் மாணவராய்ப் பயிலும் வாய்ப்பைப் பெற்றவர் .
- 2014 மே, சூன், மாதங்களில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்குப் பாவேந்தர் விழா சொற்பொழிவாற்றச் சென்று வந்தவர்.
- உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் "கலைச் சொல்லாக்க வளர்ச்சி - மொழி தூய்மை நோக்கு எனும் பொருளில் ஆய்வுக் கட்டுரை வழங்கியவர்.
- பாவேந்தர் பேரவை அமைப்பைச் நிறுவிக் கடந்த 27 ஆண்டுகளாகப் கருத்துகளைப் பரப்பி வருபவர்.
வெளியிட்டுள்ள நூல்கள்:
- சூலூர் வரலாறு[2]
- கோவை கண்ட மொழிப் போர்
- விடுதலைப் போரில்கோவை
- கல்வி காத்த கோவை
- பகுத்தறிவு இயக்கத்தில் பாரதிதாசன்
- மதம் கடவுள் மனிதன் : வளர்ச்சி வரலாறு
- விழிப்பூட்டும் மொழிப் போர்
- பாவேந்தர் வாழ்வில் அழகின் சிரிப்பு
- தமிழக மொழிப்போர் ஈகியர் வரலாறு]
- சூலூர் திராவிட இயக்க வரலாறு
- அண்ணா அறிவுக்கொடை - 110 தொகுதிகளின் தொகுப்பாசிரியர்.[3]
பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்) என்ற நூலுக்கு ந. கவுதமன் எழுதிய முன்னுரை.
மேற்கோள்கள்
- ↑ "'சூலூர் வரலாறு படைத்த செந்தலை கவுதமன்- பெரியாரால் பெயர் சூட்டப்பட்ட எழுத்தாளர்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-07-11.
- ↑ "20. கோவையை எழுதிய பேனாக்கள்". www.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-11.
- ↑ "அண்ணா :அறிவுக்கொடை /அறிஞர் அண்ணா ; தொகுப்பாசிரியர், புலவர் செந்தலை ந. கவுதமன் ; பதிப்பாசிரியர், கோ. இளவழகன். Aṇṇā :Ar̲ivukkoṭai /Ar̲iñar Aṇṇā ; tokuppāciriyar, Pulavar Centalai Na. Kavutaman̲ ; patippāciriyar, Kō. Iḷaval̲akan̲. – National Library". www.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2021-07-11.