செங்கொடி
செங்கொடி (Senkodi, அகவை:21, இறப்பு: 28 ஆகத்து 2011) ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக்கூடாது எனக் கோரி 2011 ஆகத்து 28 அன்று காஞ்சிபுரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண் போராளி ஆவார்.[1] இவர் காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகள். காஞ்சிபுரத்தில் இயங்கிய மக்கள் மன்றம் என்ற அமைப்பில் இணைந்து தமிழுணர்வுப் போராட்டங்களில் இவர் பங்கெடுத்துள்ளார்.
நிகழ்வு நடந்த நாள் காலையில் காஞ்சிபுரத்தில் நடந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டார். அன்று மாலை 6 மணிக்கு காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் திடீரென தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டு பலியானார்.[2]
2011 ஆகத்து 31 அன்று செங்கொடியின் நினைவைப் போற்றும் வகையில் மங்கல்பாடியில் உருவச் சிலையும் திறக்கப்பட்டது.[3]
மேற்கோள்கள்
- ↑ Leaders pay homage to Sengodi: Seek celemency to 3 Rajiv killers[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ தமிழ் இன உணர்வு பற்று அதிகம் கொண்ட செங்கொடி[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "உணர்வெழுர்ச்சியுடன் இடம்பெற்ற தோழர்.செங்கொடியின் இறுதி வணக்க நிகழ்வு! - சென்றுவா தமிழினப் பெருமகளே...." இம் மூலத்தில் இருந்து 2011-12-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111208010648/http://tamilwin.com/view.php?22Gp7bc3BI24eO29203jQCdd3QjH20X923e4QLVcb2pG02.